தினத்தந்தி 18.02.2014
தூத்துக்குடி மாவட்டத்தில் குடிநீர் தேவையை சமாளிக்க ரூ.11½ கோடி செலவில் பணிகள் கலெக்டர் ம.ரவிகுமார் தகவல்

தூத்துக்குடி மாவட்டத்தில் குடிநீர்
தேவையை சமாளிக்க ரூ.11 கோடியே 63 லட்சம் செலவில் பணிகள் மேற்கொள்ளப்பட
உள்ளன என்ற மாவட்ட கலெக்டர் ம.ரவிகுமார் கூறினார்.
இது குறித்து அவர் கூறியதாவது:–
குடிநீர்
தூத்துக்குடி மாவட்டத்தில் கோடை காலத்தில்
குடிநீர் தேவையை சமாளிக்கும் வகையில் 19 நகர பஞ்சாயத்துகளிலும் கைப்பம்பு,
நீர்த்தேக்க தொட்டி அமைத்தல் உள்ளிட்ட 127 பணிகள் ரூ.3 கோடியே 22 லட்சம்
செலவில் செயல்படுத்தப்பட உள்ளது. கிராம பஞ்சாயத்துகளில் 934 பணிகள் ரூ.8
கோடியே 41 லட்சம் செலவில் செய்யப்பட உள்ளது.
இது தவிர ரூ.5 கோடியே 41 லட்சம் செலவில்
பணிகள் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதே போன்று நகராட்சி,
மாநகராட்சி பகுதிகளிலும் குடிநீர் திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன.
மாவட்டத்தில் உள்ள 21 கூட்டு குடிநீர் திட்டங்களில் 100 சதவீதம் தண்ணீர்
கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
சாலைப்பணிகள்
தூத்துக்குடி மாவட்டத்தில் குறுக்குச்சாலை
முதல் கோட்டூர் வரை 4.8 கிலோ மீட்டர் தூரத்துக்கும், ரூ.54 லட்சத்து 60
ஆயிரம் செலவில் நமச்சிவாயபுரம் முதல் அருணாசலபுரம் வரை 2 கிலோ மீட்டர்
தூரமும் சாலை அமைக்கப்பட உள்ளது. அதே போன்று 100 நாள் வேலை உறுதி
திட்டத்தில் தடுப்பணை உள்ளிட்ட 225 உறுதிபடுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட
உள்ளன.
தூத்துக்குடி மாவட்டத்தில் இலவச வேட்டி,
சேலை 60 சதவீதம் பேருக்கு மட்டுமே வந்து உள்ளது. அதனை வினியோகம் செய்து
வருகிறோம். பஸ்நிலையத்தில் சுற்றித்திரியும் சிறு குழந்தைகளை மீட்டு
பள்ளியில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு மாவட்ட கலெக்டர் ம.ரவிகுமார் கூறினார்.