தினமலர் 08.09.210
ரூ. 12 கோடியில் புதிய ரோடுகள்:நகராட்சி இன்ஜினியர் தகவல்
ராமநாதபுரம்:””ராமநாதபுரம் நகராட்சியில் 12 கோடி ரூபாய் மதிப்பில் ரோடு பணிகள் விரைவில் நடைபெற உள்ளதாக,” நகராட்சி இன்ஜினியர் மகேந்திரன் தெரிவித்தார்.ராமநாதபுரம் நகராட்சியில் பாதாள சாக்கடை திட்டம் துவங்கியதிலிருந்து ரோடுகள் குண்டும் குழியுமாக மாறின. வாகனஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்குள்ளானது குறித்து “தினமலர் ‘ பலமுறை சுட்டிகாட்டி உள்ளது. இதன் எதிரொலியாக முதற்கட்டமாக அக்ரஹாரம் ரோடு, போஸ்ட் ஆபீஸ் ரோடு புதுப்பிக்கப்பட்டுள் ளது. இதை தொடர்ந்து மற்ற ரோடுகள் பணிகளும் விரைவில் நடைபெற உள்ளது.
இன்ஜினியர் கூறியதாவது: சில தினங்களில் பாதாள சாக்கடை திட்டம் பயன்பாட்டிற்கு வரஉள்ளது. திட்டத்திற்கு மக்கள் ஒத்துழைப்பு தரவேண்டும். திட்ட டிபாசிட் தொகை வீடுகளுக்கு 7000 , கடைகளுக்கு 15 ஆயிரம் ரூபாய் செலுத்தி இணைப்பு பெற்று கொள் ளலாம். குடிநீர் இணைப்பு கேட்டவுடன் வழங்கப்படுகிறது. இணைப்பு வேண்டுவோர் டிபாசிட் தொகை 5000 மற்றும் சாலை சீரமைப்பு கட்டணம் 2500 செலுத்தி இணைப்பு பெற்று கொள்ளலாம். பாதாள திட்டம் பணிகள் முடிந்தவுடன் நகராட்சி பகுதியில் உள்ள அனைத்து ரோடுகளும் 12 கோடி ரூபாய் மதிப்பில் புதுப்பிக்கப்பட உள்ளது. மக்களின் தேவைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து முடிந்தளவு பணிகளை விரைந்து செய்ய தீவிர நவடிக்கை எடுத்து வருகிறோம், என்றார்.