கசாப் வழக்கு விசாரணையால் மும்பை மாநகராட்சிக்கு ரூ. 12 கோடி இழப்பு
மும்பை, டிச. 30:
தீவிரவாதி அஜ்மல் கசாப் மீதான வழக்கின் விசாரணையால் மும்பை மாநகராட்சிக்கு ரூ. 12 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.
மும்பை தீவிரவாத தாக்குதல் வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட அஜ்மல் கசாப், ஆர்தர் ரோடு மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளான். அவனது அப்பீல் மனு, சிறை வளாகத்தில் உள்ள நீதிமன்றத்தில் விசாரிக்கப்படுகிறது.
இதற்கிடையே, ஒர்லி, பிரபாதேவி உள்பட 47 இடங்களில் புதிய குடிநீர் குழாய்களை பதிக்க, 2009ம் பிப்ரவரியில் மும்பை மாநராட்சி டெண்டர் விட்டது.
ரூ. 35 கோடிக்கு ஒப்பந்தம் எடுத்த ஒப்பந்ததாரர், 35 இடங்களில் பணியை முடித்து விட்டார்.
ஆர்தர் ரோடு சிறை அருகே உள்ள சானே குருஜி மார்க் பகுதியில் பணி நடக்கவில்லை. கசாப் வழக்கு விசாரணை தொடங்கியதால், அப்பகுதியில் பணி தொடர போக்குவரத்து போலீஸ் அனுமதி மறுத்து விட்டது. 2009 முதல் கடந்த மே வரை அப்பகுதி போலீஸ் கட்டுப்பாட்டில் இருந்தது.
தற்போது இந்த பணியை மேற்கொள்ள கூடுதலாக ரூ. 12 கோடி வேண்டும் என்று ஒப்பந்ததாரர் கோரியுள்ளார்.
இதை மாநகராட்சி பரிசீலித்து வருகிறது. கான்ட்ராக்டர் கோரியுள்ளார். இது தொடர்பாக அவர் மாநகராட்சிக்கு கடிதமும் எழுதியுள்ளார். அஜ்மல் வழக்கு விசாரணையால், தற்போது மாநகராட்சிக்கு ரூ. 12 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.