தினகரன் 20.01.2010
ரூ.12 லட்சம் மதிப்பில் வேலூர் மாநகராட்சிக்கு 2 குப்பை கலன் லாரிகள்
வேலூர் : வேலூர் மாநகராட்சிக்கு சொந்தமான 2 லாரிகள் ரூ.12 லட்சம் மதிப்பில் குப்பை கலன் லாரிகளாக மாற்றி வடிவமைக்கப்பட்டு உள்ளன.
வேலூர் மாநகராட்சியில் குப்பைகள் அதிகமாக சேரும் இடங்களில் மூடியுடன் கூடிய நவீன குப்பை தொட்டிகள் வைக்கப்பட்டு உள்ளன. இவற்றில் குப்பைகள் நிரம்பியதும், காலி குப்பை தொட்டிகளை அங்கு வைத்துவிட்டு, குப்பை நிரம்பிய கலன்களை லாரியில் ஏற்றிச் செல்கின்றனர். இதனால் குப்பைகள் சாலையில் சிதறாமல் கொண்டுசெல்லப்படுகிறது.
நகரில் 40 இடங்களில் இந்த குப்பை கலன்கள் வைக்கப்பட்டு உள்ளன. இவற்றை ஏற்றிச்செல்ல 2 குப்பை கலன் லாரிகள் உள்ளன. கூடுதலாக 2 லாரிகள் தேவைப்பட்டதால் மாநகராட்சிக்கு சொந்தமான 2 பழைய லாரிகள் ரூ.12 லட்சம் மதிப்பில் குப்பை கலன் லாரிகளாக மாற்றி வடிவமைக்கப்பட்டு உள்ளன.
குப்பைகள் அதிகமாக சேரும் இடங்களில் கூடுதலாக நவீன குப்பை கலன்கள் அமைக்க மாநகராட்சி முடிவு செய்துள்ளது. இதற்காக புதிதாக 100 குப்பை கலன்கள் வாங்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.