தினமணி 01.03.2013
ரூ. 12 லட்சம் செலவில் 2 சுகாதார வளாகங்கள் திறப்பு
திண்டுக்கல் மாவட்டம், வத்தலக்குண்டு பேரூராட்சியில் 12 லட்சம் செலவில் இரண்டு சுகாதார வளாகங்கள் திறக்கப்பட்டன. வத்தலக்குண்டு பேரூராட்சி 7 வது மற்றும் 9 வது வார்டு பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று ரூ. 12 லட்சம் மதிப்பீட்டில் இரண்டு சுகாதார வளாகங்கள் கட்டப்பட்டு, அதன் திறப்பு விழா நடைபெற்றது. விழாவுக்கு பேரூராட்சி கவுன்சிலர் எம்.வி.எம். பாண்டியன் தலைமை வகித்து, திறந்து வைத்தார். துணைத் தலைவர் எம்.ஏ. பீர்முகமது, செயல் அலுவலர் முருகேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். துப்பரவு ஆய்வாளர் ஜாபர் அலி வரவேற்றார். கவுன்சிலர்கள், அதிமுக நிர்வாகிகள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். தலைமை எழுத்தர் பாண்டி நன்றி கூறினார்.