தினமலர் 03.08.2010
1.2 கி.மீ., நீளத்திற்கு பூங்காசென்னை
: “”கூவம் சீரமைப்பு பணியின் கீழ் அமைக்கப்பட்டுள்ள பூங்காவை துணை முதல்வர் ஸ்டாலின் நாளை திறந்து வைப்பார்,” என மேயர் சுப்ரமணியன் கூறினார்.புதுப்பேட்டையில் பூங்கா சீரமைக்கும் பணியை நேற்று பார்வையிட்ட மேயர் சுப்ரமணியன் கூறியதாவது: கூவம் சீரமைப்பு பணியின் கீழ் புதுப்பேட்டை, லாங்க்ஸ் கார்டன் சாலையில், கூவம் ஆற்றங்கரையில் மேற்கு பகுதியில் 730 மீட்டர் நீளத்திற்கு நடைபாதையுடன் கூடிய பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. ஒரு கோடியே 34 லட்ச ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள பூங்காவில் சுற்றுச்சுவர் அழகிய புல் தரை, பூஞ்செடிகள், மின் விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளது. துணை முதல்வர் ஸ்டாலின் பூங்காவை நாளை திறந்து வைப்பார். அது போல் சுவாமி சிவானந்தா சாலையில் கூவம் ஆற்றங்கரை ஓரம் 86 லட்ச ரூபாய் செலவில், 1.2 கி.மீ., நீளத்திற்கு அமைக்கப்பட்டுள்ள பூங்காவையும் துணை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைப்பார்.இவ்வாறு மேயர் கூறினார்.