நகராட்சிக்கு வரி செலுத்தாத 12 கடைகளுக்கு “சீல்’ வைப்பு
வால்பாறை : வால்பாறையில் வரி செலுத்தாமல் “டிமிக்கி’ கொடுத்த 12 கடைகளை நகராட்சி அதிகாரிகள் பூட்டி சீல் வைத்தனர்.
வால்பாறை நகராட்சியில் மொத்தம் 21 வார்டுகள் உள்ளன. நகராட்சிக்கு சொந்தமான 358 கடைகள் உள்ளன. வால்பாறை நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சொத்துவரி, குடிநீர் கட்டணம், கடைவாடகை உள்ளிட்ட வரிகள் செலுத்த கடந்த 12ம் தேதிக்குள் செலுத்த நகராட்சி நிர்வாகம் கெடு விதித்தது. இதனையடுத்து வால்பாறை டவுன் பகுதியில் உள்ள பெரும்பாலான மக்கள் தங்கள் செலுத்த வேண்டிய வரியினங்களை செலுத்தியுள்ளனர்.
வால்பாறை புதுமார்க்கெட் பகுதியில் பெரும்பலாõன கடைகள் நகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரிகளை செலுத்தாமல் “டிமிக்கி’ கொடுத்து வந்தனர். இதனையடுத்து நகராட்சி சுகாதார ஆய்வாளர் மணிகண்டன் தலைமையில் அதிகாõரிகள் மார்க்கெட் பகுதியில் நீண்ட நாட்களாக வாடகை செலுத்தாத கடைகளை பூட்டி சீல் வைத்தனர்.
நகராட்சி அதிகாரிகள் கூறியதாவது: வரி செலுத்துவதற்கான கெடு முடிவடைந்த நிலையிலும் பெரும்பாலானவர்கள் கடை வாடகை செலுத்தாமல் உள்ளனர். தற்போது 60 சதவீதம் வரி வசூலிக்கப்பட்டது. வரி செலுத்தாத கடைகள் பூட்டி சீல் வைக்கப்பட்டுள்ளன. இதே போல் வீடு மற்றும் கடைகளில் குடிநீர் கட்டணம் செலுத்தாதவர்களின் குடிநீர் இணைப்பும் துண்டிக்கப்படும் என்றனர்.