தினகரன் 29.11.2010
மாநகராட்சி பள்ளி மாணவிகளுக்கு ஒதுக்கப்பட்ட நிதியில் ரூ1.24 கோடி மோசடிமும்பை,நவ.29: மும்பை மாநகராட்சி பள்ளிகளில் படிக்கும் மாணவிகள் பள்ளிப்படிப்பை பாதியில் கைவிடுவதை தடுக்கும் வகையில் அவர்கள் பள்ளிக்கு வருவதை ஊக்கப்படுத்த, தினம் ஒரு ரூபாய் வழங்கும் திட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதியில் ரூ1.24 கோடி மோசடி நடந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மும்பை மாநகராட்சி பள்ளில் படிக்கும் மாணவிகள் பள்ளிப்படிப்பை பாதியில் கைவிடுவதை தடுக்கும் வகையில் மாநகராட்சி நிர்வாகம் பள்ளிக்கு வரும் நாட்களுக்கு தினம் ஒரு ரூபாய் வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தியது.
மாநகராட்சி பள்ளிகளில் தற்போது இரண்டு லட்சம் மாணவிகள் வரை படிக்கின்றனர். இவர்களில் 10 ஆயிரம் பேர் வரை ஒவ்வொரு ஆண்டும் பள்ளிப்படிப்பை பாதியில் கைவிடுவதாக தெரிய வந்துள் ளது.
இந்நிலையில் இத்திட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதியில் 1.24 கோடி ரூபாய் அளவுக்கு மோசடி செய்யப்பட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 2007&08ம் ஆண்டு 146922 மாணவிகளுக்கு தினம் ஒரு ரூபாய் திட்டத்தின் கீழ் 2.59 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் இதில் 62 ஆயிரம் மாணவிகளுக்கு இந்த நிதி போய் சேரவில்லை என்று தெரிய வந்துள்ளது. இதன் மூலம் 1.24 கோடி ரூபாய் அளவுக்கு மோசடி நடந்துள்ளது.
இந்த நிதி மாநகராட்சியின் வங்கி கணக்கில் இருந்து எடுக்கப்பட்டுள்ளது. ஆனால் சம்மந்தப்பட்ட மாணவிகளுக்கு போய் சேரவில்லை. இது குறித்து மாநகராட்சி துணை கமிஷனர் அர்விந்திடம் கேட்டதற்கு, “அனைத்து ஆவணங்களையும் சரிபார்த்த பிறகுதான் இது குறித்து கருத்து தெரிவிக்க முடியும்” என்று தெரிவித்து விட்டார். மாநகராட்சி தேர் தல் நெருங்கும் நிலையில் புதிய ஊழல் தலையெடுத்திருப்பது சிவசேனா கூட்டணிக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது.