தினத்தந்தி 07.12.2013
ஆவடி நகராட்சி பகுதிகளில் 125 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் சிக்கியது

திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் கொ.வீரராகவராவ் உத்தரவின் பேரில் ஆவடி
நகராட்சி கமிஷனர் மோகன் தலைமையில் சுகாதார அலுவலர் பழனிச்சாமி, சுகாதார
ஆய்வாளர்கள் மற்றும் நகராட்சி பணியாளர்கள் நேற்று காலை ஆவடி நகராட்சிக்கு
உட்பட்ட பகுதிகளில் உள்ள மளிகை கடைகள், ஓட்டல், மீன் கடை, பூ கடை, காய்கறி
கடை, பேக்கரிகள் உள்ளிட்டவைகளில் ஆய்வு செய்தனர்.
அப்போது அந்த கடைகளில் விற்பனைக்கு வைக்கப்பட்டு இருந்த மற்றும்
பயன்படுத்திக்கொண்டிருந்த 40 மைக்ரான் அளவுக்கு குறைவாக உள்ள சுமார் 125
கிலோ பிளாஸ்டிக் பைகள் உள்ளிட்ட பிளாஸ்டிக் பொருட்களை கைப்பற்றினார்கள்.
‘‘ஆவடி நகராட்சிக்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலும் தொடர்ந்து ஒரு வார காலம் இந்த பணிகள் நடைபெறும்’’ என கமிஷனர் மோகன் தெரிவித்தார்.