தினமலர் 28.07.2010
ரூ.126 கோடி செலவில் சாலை சீரமைப்பு
சென்னை : “சென்னையில் 10 மண்டலங்களிலும் 126 கோடி ரூபாய் செலவில் சாலைகள் சீரமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது‘ என, மாநகராட்சி அறிவித்துள்ளது.இது குறித்து வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு:சென்னை மாநகராட்சியின் 10 மண்டலங்களில் 542.26 கி.மீ., நீளமுள்ள 2,093 உட்புற சாலைகள் 101 கோடியே 87 லட்சம் செலவில் சீரமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதில், குறிப்பிட்ட 435 உட்புற சாலைகளில் 4 லட்ச ச.மீ., பரப்பளவிற்கு அகழ்ந்தெடுத்து புதுப்பிக்கும் முறையில் 3 கோடி ரூபாய் செலவில் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது.பஸ் சாலை துறை சார்பில், 153 சாலைகள் 50 கி.மீ., நீளத்திற்கு 4 செ.மீ., ஆழத்திற்கு அகழ்ந்தெடுத்து சேவர் இயந்திரம் மூலம் சாலை அமைக்கப்படும். இதற்கு 25 கோடி ரூபாய் மதிப்பில் பணி ஆணை வழங்கப்பட்டுள்ளது. நடப்பு ஆண்டில் 126 கோடி ரூபாய் செலவில் சாலைகள் சீரமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது.சூரிய நாராயண செட்டி சாலை, நாராயண குரு சாலை, என்.எஸ்.கே., சாலை, போஸ்டல் காலனி ஆகிய சாலைகளில் புதுப்பிக்கும் பணி தற்போது நடக்கிறது. மேலும் திருவொற்றியூர் நெடுஞ்சாலை, மணலி சாலை, ராஜாஜி சாலை, டிமலஸ் சாலை, நியூ ஆவடி சாலை, புரசைவாக்கம் நெடுஞ்சாலை, காமராஜர் சாலை, பின்னி சாலை போன்று 29 சாலைகள் 10.78 கி.மீ., நீளத்திற்கு அகழ்ந்தெடுத்து சாலைகள் அமைக்கும் பணி முடிக்கப்பட்டுள்ளது.