மாலை மலர் 27.07.2010
சென்னையில் ரூ
.126 கோடி செலவில் சாலைகள் சீரமைப்பு மாநகராட்சி நடவடிக்கைசென்னை, ஜூலை. 27- சென்னை மாநகராட்சி வெளியிட்டு செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
சென்னை மாநகராட்சி சார்பில் 10 மண்டலங்களில் சாலைகள் சீரமைக்கும் பணிகளை சென்னை மாநகராட்சி மேற்கொண்டு வருகிறது. பேருந்து சாலைகளை சென்னை மாநகராட்சி பேருந்து சாலைத்துறையும், உட்புறச்சாலைகளை சீரமைக்கும் பணி துணை முதல்–அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுரைப்படி போர்க்கால அடிப்படையில் 10 மண்டலங்களிலும் நடைபெற்று வருகிறது.
இந்த நிதியாண்டில் 2093 உட்புறச்சாலைகள் 542.26 கி.மீ. நீளத்திற்கு ரூ.101 கோடியே 87 லட்சம் செலவில் அமைக்க திட்டமிட்டு, அவற்றில் 435 உட்புறச்சாலைகள் 4.06 லட்சம் சதுர மீட்டர் பரப்பளவிற்கு அகழ்ந்தெடுத்து, புதுப்பிக்கும் முறையில் ரூபாய் 3 கோடி செலவில் மேற்கொள்ளப்படுகிறது.
சென்னை மாநகராட்சியில் பேருந்து சாலைகள் துறை சார்பில் 153 சாலைகள் 50 கி.மீ. நீளத்திற்கு ரூபாய் 25 கோடி மதிப்பீட்டில் 40 மி.மீ. ஆழத்திற்கு அகழ்ந்தெடுத்து, பேவர் இயந்திரம் மூலம் புதுப்பிக்கப்படுகிறது. பழைய தார்ச்சாலை மேல் புதிய தார்ச்சாலை போடுவதால் சாலையின் மேல் மட்டம் உயர்ந்து, அருகில் உள்ள வீடுகள் பள்ளமாகி விடுவதால் மழை தண்ணீர் வீடுகளில் புக வாய்ப்பு உள்ளதால், இந்த இடர் பாட்டினை தவிர்ப்பதற்காக புதிய எந்திரம் மூலம் சாலையை அகழ்ந்தெடுத்து, புதுப்பிக்கப்படுகிறது.
புதிய அகழ்ந்தெடுக்கும் எந்திரத்தின் மூலம் சாலையை 1.3 மீட்டர் அகலத்திற்கு சுமார் 2 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவிற்கு தினமும் அகழ்ந்தெடுக்கப்படுகிறது. இதன் மூலம் மேடு, பள்ளம் இல்லாமல் சாலைப் போக்குவரத்து இடைஞ்சலின்றி செல்ல வழிவகை செய்யப்பட்டுள்ளது. ஆக மொத்தம் நடப்பு ஆண்டில் ரூ.126 கோடி செலவில் சென்னையில் சாலைகளை சீரமைக்கும் பணிகளை சென்னை மாநகராட்சி மேற்கொண்டு வருகிறது.
அதில், பேருந்து சாலைத்துறை மூலம் சூரிய நாராயண சாலை, நாராயண குரு சாலை, என்.எஸ்.கே.சாலை, போஸ்டல் காலனி 3வது தெரு ஆகிய சாலைகளில் புதுப்பிக்கும் பணி நடைபெற்று வருகிறது. மேலும், திருவெற்றியூர் நெடுஞ்சாலை, மணலி சாலை, சிமெட்ரி சாலை, ராஜாஜி சாலை, எம்.கே.பி.நகர் மத்திய நிழற்சாலை, டாக்டர் அம்பேத்கார் கல்லூரி சாலை, டிமலஸ் சாலை, கந்தசாமி சாலை, நியூ ஆவடி சாலை, புரசைவாக்கம் நெடுஞ்சாலை, பாரதி சாலை, கௌடியா மடம் சாலை, எத்திராஜ் சாலை, லான்ஸ் கார்டன் சாலை, பின்னி சாலை, காமராஜர் சாலை, அசோக் நகர் 12வது நிழற்சாலை, பாரதிதாசன் காலனி பிரதான சாலை, வேளச்சேரி பிரதான சாலை போன்ற பல்வேறு பேருந்து சாலைகள் அகழ்ந்தெடுத்து, புதுப்பிக்கும் பணி மேற் கொள்ளப்பட உள்ளது. பேருந்து சாலைத்துறை சார்பில் 29 பணிகள் 10.78 கி.மீ. நீளத்திற்கு சாலை அகழ்ந்தெடுத்து, புதுப்பிக்கும் பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.