தினமணி 07.04.2013
கருணை அடிப்படையில் 13 பேர் பணி நியமனம்
மதுரை மாநகராட்சி கல்விப் பிரிவில் 13 பேருக்கு கருணை அடிப்படையிலான பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன.
மாநகராட்சியில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், மேயர் வி.வி. ராஜன்செல்லப்பா பணி நியமன ஆணைகளை வழங்கினார். ஆணையர் ஆர். நந்தகோபால், கல்வி அலுவலர் மதிஅழகுராஜ், கல்விக்குழு தலைவர் சுகந்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
மாநகராட்சி கல்விப் பிரிவு மற்றும் மாநகராட்சி பள்ளிகளில் பணிக்காலத்தில் இறந்த பணியாளர்களின் வாரிசுதாரர்கள் அடிப்படையில் 2 இளநிலை உதவியாளர்கள், 8 அலுவலக உதவியாளர், 3 காவலாளிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.