தினமணி 11.04.2013
இது குறித்து குடிநீர் வாரிய மேலாண்மை இயக்குநர் பி.சந்திரமோகன் வெளியிட்ட செய்தி:
குடிநீர் வாரியம் சார்பில் மாதத்தின் 2-வது சனிக்கிழமைகளில் குறைதீர்க்
கூட்டம் நடைபெற்று வருகிறது. அதன்படி வருகிற 13-ம் தேதி இம்மாதத்திற்கான
குறைதீர்க் கூட்டம் நடைபெறும். இதில் பொதுமக்கள் பங்கேற்று குடிநீர்
மற்றும் கழிவுநீர் குறித்த தங்களின் பிரச்னைகளை மனுக்கள் வாயிலாக
தெரிவிக்கலாம்.
திருவொற்றியூர், மணலி, மாதவரம், தண்டையார்பேட்டை, மாயவரம்,
திரு.வி.க.நகர், அம்பத்தூர், அண்ணா நகர், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம்,
வளசரவாக்கம், ஆலந்தூர், அடையாறு, பெருங்குடி, சோழிங்கநல்லூர் உள்ளிட்ட
இடங்களில் உள்ள குடிநீர் வாரிய பகுதி அலுவலங்களில் காலை 10 மணி முதல்
பிற்பகல் 1 மணி வரை குறைதீர்க் கூட்டம் நடைபெறும்.
ஒவ்வொரு பகுதி அலுவலகத்திலும் குடிநீர் வாரிய மேற்பார்வை பொறியாளர்
தலைமையில் குறைதீர்க் கூட்டம் நடைபெறும். கடந்த மாதம் நடந்த கூட்டத்தில் 33
மனுக்கள் பெறப்பட்டுள்ளன. அதில் 31 மனுக்கள் மீது நடவடிக்கை
எடுக்கப்பட்டுள்ளது என்று அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.