தினமலர் 13.01.2010
பிப்., 13க்குள் தொழில் வரி செலுத்த அறிவுறுத்தல்
திருப்பூர் : அபாயகரமானதும், அருவருக்கத்தக்கதுமான தொழிலுக்கான வரியை, திருப்பூர் மாநகராட்சி அலுவலகத்தில் பிப்., 13க்குள் செலுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாநகராட்சி பகுதியில் இயங்கும் பேக்கரி, ஓட்டல் முதல் பவர்டேபிள் யூனிட்டுகள் வரை அனைத்து தொழில் பிரிவுகளுக்கும், மாநகராட்சி மூலமாக உரிமம் வழங்கப்படுகிறது. பெறப்படும் தொழில் உரி மத்தை புதுப்பித்துக்கொள்ள, ஆண்டுதோறும், அபாய கரமானதும், அருவருக்கத்தக்கதுமான தொழில் வரி வசூலிக்கப்படுகிறது. நிதியாண்டு இறுதிக்குள், வரியை செலுத்தி உரிமம் புதுப்பிக்கப்படும்.
இதுகுறித்து மாநகராட்சி கமிஷனர் ஜெயலட்சுமி வெளியிட்டுள்ள அறிக்கையில், “திருப்பூர் மாநக ராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள அனைத்து தொழில்கள் மற்றும் வியாபாரிகள், 2010-11ம் ஆண் டுக்கு, மாநகராட்சி சட்ட விதிகளின்படி, தொழில் உரிமையாணை கட்டண தொகையை செலுத்த வேண்டும். பிப்., 13க்குள் வரியை செலுத்தி உரி மத்தை புதுப்பித்துக்கொள்ள வேண்டும். தவறும் பட்சத்தில், சட்ட விதிகளின் அடிப்படையில் நட வடிக்கை மேற்கொள்ளப்படும்,’ என அறிவுறுத்தியுள்ளார்.