தினமலர் 17.03.2010
குடிநீர், கழிவுநீர் பிரச்னை 139 புகார் மனுக்கள் பரிசீலனை
சென்னை : சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியம் சார்பில் நடந்த மாதாந்திர கூட்டத்தில், 139 புகார் மனுக்கள் பெறப்பட்டன.இது குறித்து வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தின் மாதாந்திர பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம், கடந்த 13ம் தேதி நடந்தது. கொடுங்கையூர், தண்டையார்பேட்டை, ராயபுரம், வண்ணாரப்பேட்டை, பெரம்பூர், வியாசர்பாடி, கீழ்ப்பாக்கம், அயனாவரம், அண்ணாநகர், முகப் பேர், சேப்பாக்கம், திருவல்லிக்கேணி, சேத்துப் பட்டு, நுங்கம்பாக்கம், தி.நகர், கோடம்பாக்கம், சைதாப்பேட்டை, கோட் டூர்புரம், ஆழ்வார் பேட்டை,மயிலாப்பூர், அடையார், திருவான்மியூர் மற்றும் வேளச்சேரி பகுதிகளில் உள்ள துறை அலுவலகங்களில், பகுதி மேற் பார்வை பொறியாளர் தலைமையில் இக்கூட்டம் நடந்தது.அக்கூட்டத்தில், குடிநீர் மற்றும் கழிவுநீர் பிரச்னை தொடர்பாக 139 புகார் மனுக்கள் பெறப்பட்டன. இம்மனுக்கள் மீது பகுதி பொறியாளர்கள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இவ்வாறு செய்திக் குறிப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.