தினமலர் 05.05.2010
வறட்சி சமாளிக்க ரூ.14 கோடி
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்ட வறட்சியை சமாளிக்க 14 கோடி ரூபாய் தேவை என மாவட்ட நிர்வாகம் அரசிடம் கேட்டுள்ளது.கலெக்டர் வள்ளலார் கூறியதாவது: திண்டுக்கல் மாவட்டத்தில் வறட்சியை சமாளிக்க அனைத்து ஆழ் துளை குழாய்களையும் சீரமைக்க உத்தரவிடப் பட்டுள்ளது. தவிர பி.டி.ஓ.,க்கள், நகராட்சி கமிஷனர்கள், பேரூராட்சி செயல் அலுவலர்கள் மூலம் ஒவ்வொரு பகுதிக்கும் தேவையான குடிநீர் திட்ட விவரங்களை சேகரித்து வழங்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தவிர மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் 14 கோடி ரூபாய்க்கு வறட்சி நிவாரண திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டு அரசுக்கு அனுப்பி வைக்கப் பட்டுள் ளது. இவ்வாறு கலெக்டர் தெரிவித்தார்.