தினமலர் 22.01.2010
மனசு ரொம்ப பெரிசு: ரோடு போடுவதற்காக ரூ.1.5 கோடி இடம் தானம்
திருப்பூர் : திருப்பூர் மங்கலம் ரோட்டுக்கு வடபுறம் ஆலாங்காடு அறிவு திருக்கோவில் பகுதியில் இருந்து பாரப்பாளையம் வடக்கு தோட்டம் வழியாக, மங்கலம் ரோட்டை இணைக்கும் வகையில் தார் ரோடு போட முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற் காக, தனியார் ஒருவர் 1.5 கோடி ரூபாய் மதிப்புள்ள 9,000 சதுர அடி இடத்தை தானமாக கொடுத்துள் ளார். இதற்கான தானக்கிரைய பத்திரம், மேயர் செல்வராஜ், கமிஷனர் ஜெயலட்சுமியிடம் நேற்று ஒப்படைக்கப்பட்டது.
திருப்பூர் மங்கலம் ரோட்டுக்கு வடபுறம் ஆலாங் காடு பகுதியில் அறிவு திருக்கோவில் உள்ளது. இவ் வழியாக, மாடர்ன் டையிங் வரை மண் ரோடு உள் ளது. இவ்வழியாக புதிதாக தார் ரோடு அமைத்து வாகன போக்குவரத்துக்கு வழி செய்ய, மாநகராட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது. கடந்த 2005ல் ஆக., 28ம் தேதி, “மாடர்ன் டையிங்‘ உரிமையாளர் சரோ ஜினியிடம் இருந்து 100 அடி நீளம்; 30 அடி அகலத் தில் 3,000 சதுர அடி நிலம் தானமாக பெறப்பட்டது. தற்போது, ஆலாங்காடு ஈஸ்வரமூர்த்தி மனைவி பத்மஜெயந்தி, அப்பகுதியில் புதிதாக தார் ரோடு அமைக்க, 30 அடி அகலம்; 300 அடி நீளத்தில் 9,000 சதுர அடி நிலத்தை மாநகராட்சிக்கு தானமாக வழங்கியுள்ளார். இதற்கான தானக்கிரைய பத்தி ரத்தை, மேயர் செல்வராஜ், துணை மேயர் செந்தில் குமார், கமிஷனர் ஜெயலட்சுமியிடம், 29வது வார்டு கவுன்சிலர் கணேஷ் நேற்று ஒப்படைத்தார்.
புதிதாக தார் ரோடு அமைக்க, “மாடர்ன் டையிங்‘ உரிமையாளரிடம் பலமுறை பேச்சு நடத்தி, இடத்தை தானமாக பெற்றுக்கொடுக்க முயற்சித்த எம்.பி., சிவசாமிக்கும், தற்போது, பத்மஜெயந்தி யிடம் இடத்தை தானமாக பெற முயற்சித்த மேயர், துணை மேயருக்கும் கருவம்பாளையம் பகுதி மக்கள் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது. ஆலாங்காடு அறிவு திருக்கோவில் பகுதியில் இருந்து வடக்கு தோட்டம் வழியாக, மங்கலம் ரோட்டை இணைக்கும் வகையில் தார் ரோடு அமைக் கும் போது, மங்கலம் ரோட்டுக்கு மாற்றுப் பாதை யாக இப்புதிய ரோடு அமையும். மங்கலம் ரோட் டில் போக்குவரத்து நெரிசல் கணிசமாக குறையும். தானமாக இடம் கிடைத்ததை தொடர்ந்து, ஆலங் காடு வழியாக ஒரு கி.மீ., தூரத்துக்கு, 30-50 அடி அகலத்தில் புதிதாக தார் ரோடு அமைப்பதற்கான நடவடிக்கையில் மாநகராட்சி ஈடுபட்டுள்ளத.