தினமணி 19.02.2010
சுகாதார விதிகளை கடைபிடிக்காத 15 ஹோட்டல்களுக்கு நோட்டீஸ்
திருப்பூர், பிப்.18: பொது சுகாதார விதிகளைக் கடைபிடிக்காத 15 ஹோட்டல்களுக்கு திருப்பூர் மாநகராட்சி சுகாதாரக் பிரிவு சார்பில் நோட்டீஸ் அளிக்கப்பட்டது.
திருப்பூர் மாநகராட்சி பகுதியில் 600க்கு மேற்பட்ட ஹோட்டல்கள் இயங்கி வருகின் றன. பெரும்பாலான ஹோட்டல்களில் சுகாதார விதிகளை முறையாக கடைபி டிக்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டுகள் அதிகரித்து வந்தன. இதையடுத்து, மாநகர் நல அதிகாரி கே.ஆர்.ஜவஹர்லால் தலைமையில் 6 சுகாதார ஆய்வாளர்கள் கொண்ட குழுவினர், வியாழக்கிழமை அவிநாசி சாலையில் உள்ள ஹோட்டல்களில் திடீர் சோதனை மேற்கொண்டனர்.
20க்கு மேற்பட்ட ஹோட்டல்களில் நடத்தப்பட்ட இந்த திடீர் சோதனையில் சமை யலறை, சமையலுக்கு பயன்படுத்தும் பொருட்கள், கழிப்பிடம், பணியாளர்களின் உடல் உள்ளிட்டவை குறித்து ஆய்வு செய்யப்பட்டது. இதில், 15 ஹோட்டல்கள் பொது சுகாதார விதிகளுக்கு புறம்பாக சுகாதாரமற்ற முறையில் இயங்கி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அந்த ஹோட்டல் நிர்வாகத்தினருக்கு பொது சுகாதார விதிகள் குறித்து தெளிவுபடுத்திம அதிகாரிகள், 7 தினங்களுக்குள் சுகாதார நடவடிக்கைகள் மேற்கொள்ள தோட்டீஸ் அளித்து உத்தரவிட்டனர். தவிர, அந்த ஹோட்டல் பணியாளர்களுக்கு, வயிற்றுப் புழுக்களை அழிக்கக்கூடிய மாத்திரைகளும் விநியோகிக்கப்பட்டன.
இதுகுறித்து மாநகர் நல அதிகாரி ஜவஹர்லால் கூறுகையில், திருப்பூர் மாநகராட்சி பகுதி களில் உள்ள அனைத்து ஹோட்டல்களிலும் இனி ஆய்வுப் பதிவேடு வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மாதம் இருமுறை சுகாதார ஆய்வாளர்கள் ஹோட்டல்களில் திடீர் சோதனையிட்டு குறைகள் குறித்த இந்த பதிவேட்டில் குறிப்பிடுவர். சுகாதார நடவடிக்கைகளை மேற்கொள்ளாத ஹோட்டல்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும், என்றார்.