தினமலர் 22.04.2010
15 துப்புரவு பணியாளர் நீக்கம்
நெய்க்காரப்பட்டி : நெய்க்காரப்பட்டி பேரூராட்சியில் தினக்கூலி அதிகம் கேட்ட தற்காலிக துப்புரவு பணியாளர்கள் 15 பேர் பணி நீக்கம் செய்யப்பட்டனர்.நெய்காரப்பட்டி பேரூராட்சியில் நிரந்தர துப்புரவு பணியாளர்கள் 16 பேர் உள்ளனர். இவர்கள் நீங்கலாக 15 தற்காலிக பணியாளர்கள் கடந்த சில மாதங்களாக பணிபுரிகின்றனர். இவர்களுக்கு தினக்கூலியாக ரூ. 50 தரப்பட்டது. இதனை ரூ. 70 ஆக உயர்த்தி தர வேண்டும் எனக்கோரிக்கை வைத்தனர். இதையடுத்து இம்மாதம் முதல்தேதியில் இருந்து 16 பேரையும் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயற்குழு உறுப்பினர் மேகலா, துப்புரவு தொழிலாளர் மாரியப்பன், பாதிக்கப்பட்ட பணியாளர் கனகா ஆகியோர் பேரூராட்சி அலுவலகத்தில் பணியில் சேர்க்க மனு தந்தனர். மனுவை பெற்ற பேரூராட்சி நிர்வாகம் மே முதல் தேதியில் இருந்து பணியில் சேர்த்து கொள்வதாக உறுதி தந்துள்ளது.