தினமணி 19.09.20098
ரூ. 15 லட்சத்தில் உயர்கோபுர மின்விளக்கு
ஒட்டன்சத்திரம், செப். 18: ஒட்டன்சத்திரம் பேரூராட்சியில் ரூ. 15 லட்சம் மதிப்பில், 3 இடங்களில் உயர் கோபுர மின் விளக்கை அர. சக்கரபாணி எம்எல்ஏ, என்.எஸ்.வி. சித்தன் எம்.பி. ஆகியோர் இயக்கி வைத்தனர்.
ஒட்டன்சத்திரம் பேரூராட்சிக்கு உள்பட்ட செக்போஸ்ட், காந்தி மார்க்கெட், தும்மிச்சம்பட்டி பிரிவு ஆகிய இடங்களில் பேரூராட்சி பொது நிதியில் இருந்து, தலா ரூ. 5 லட்சம் மதிப்பில், உயர்கோபுர மின்விளக்குகள் அமைக்கப்பட்டன.
இதன் திறப்புவிழா வியாழக்கிழமை இரவு நடைபெற்றது.
விழாவுக்கு, பேரூராட்சித் தலைவர் உமாமகேஸ்வரி கண்ணன் தலைமை வகித்தார்.
துணைத் தலைவர் வனிதா ஆறுமுகம், செயல் அலுவலர் ஜெயக்கொடி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பேரூர் கழகச் செயலர் கதிர்வேல்சாமி வரவேற்றார்.
பேரூராட்சிக்குள்பட்ட விஸ்வநாத நகர், சத்யா நகரில் தலா ரூ. 2.63 லட்சம் செலவில் கட்டப்பட்ட அங்கன்வாடி மையக் கட்டடத்தையும் சித்தன், சக்கரபாணி ஆகியோர் திறந்து வைத்தனர்.
விழாவில், முன்னாள் கவுன்சிலர்கள் கண்ணன், ஆறுமுகம், பன்னீர்செல்வம், பி.கே. முருகேசன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.