தினகரன் 15.06.2010
ரூ.1.5 லட்சத்தில் குடிநீர் தொட்டி
பள்ளிபாளையம், ஜூன் 15: ஆலாம்பாளையம் பேரூராட்சி பகுதியில் உள்ள கரட்டாங்காடு பகுதியில் ரூ.1 லட்சத்து 50 ஆயிரத்தில் புதிய குடிநீர் தொட்டி கட்டப்படுகிறது. இதற்கான கால்கோள் விழா நடந்தது. இதற்கு பேரூராட்சி மன்ற தலைவர் யுவராஜ் தலைமை தாங்கினார். இப்பணியை துவக்கி வைத்து மத்திய சுகாதாரத் துறை இணை அமைச்சர் காந்திசெல்வன் பேசுகையில், “60 ஆயிரம் லிட்டர் கொள் ளவு கொண்ட இந்த குடிநீர் தொட்டி ரூ.1.50 லட்சத்தில் கட்டப்படுகிறது. இன்னும் 3 மாதங்களுக்குள் தொட்டி கட்டி முடிக்கப்பட்டு மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும்“ என்றார். இந்நிகழ்ச்சியில், ஆலாம்பாளையம் பேரூராட்சி செயல் அலுவலர் கோவிந்தராஜ், பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் நாகமணி சரவணன், கணேசன், செல்லதுரை, சாமிநாதன், தொலைபேசி ஆலோசனை குழு உறுப்பினர் நடனசபாபதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.