தினகரன் 05.10.2010
அக்.15 முதல் பெரியகுளம் நகரில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த தடைபெரியகுளம், அக். 5: பெரியகுளம் நகரில் வரும் 15ம் தேதி முதல் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்படும் என்று ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
தேனி மாவட்டம், பெரியகுளம் நகராட்சியில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவதற்கு தடை விதிப்பதற்கான ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு நகராட்சி ஆணையாளர் (பொறுப்பு) மோனி தலைமை வகித்தார். சுகாதார ஆய்வாளர்கள் அகமது கபீர், ஜெயசீலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த கூட்டத்தில் வர்த்தக நிறுவனங்கள், ஓட்டல்கள், டீக்கடைகள், மளிகை கடைகள் உரிமையாளர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில், நகராட்சி பகுதியில் உள்ள வர்த்தக நிறுவனங்கள், ஓட்டல்கள், டீக் கடைகள், மளிகை கடைகளில் வரும் 15ம் தேதி முதல் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தக் கூடாது. மளிகை கடைகளில் விற்பனைக்கு வைக்க கூடாது. இதனை மீறி பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்தால் பொருட்கள் பறிமுதல் செய்யப்படுவதுடன், அபராதம் விதிக்கப்படும். மேலும் சட்டப்படியான நடவடிக்கை தொடரப்படும் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.