தினகரன் 06.08.2010
15 அடி உயரத்துக்கு மேல் கட்அவுட் வைக்க கூடாது 5 நாளில் அகற்றவும் உத்தரவு
அரியலூர், ஆக. 6: அரியலூ ரில் 15 அடிக்கு மேல் விளம் பர கட்அவுட் வைக்கக்கூடாது என்றும், 5 நாட்க ளில் அவற்றை அகற்ற வேண் டும் என்றும் அரியலூர் கலெக்டர் ஆபிரகாம் தெரிவித்துள்ளார். இது தொடர் பாக அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
அரியலூர் நகராட்சி பகுதியில் விளம்பர போர்டு, விளம்பர தட்டி, கட் அவுட் போன்றவை தற்காலிகமாக அல்லது நிரந்தரமாக நிறுவி விளம்பரம் செய்ய விளம்பர சட்டம் 2003ன்படி உரிமம் மற்றும் அனுமதி மாவட்ட கலெக்டரிடம் பெற வேண் டும். கலெக்டர் அனுமதிக் கும் இடத்தில்தான் விளம்பரம் செய்ய வேண்டும்.
அரியலூர் நகரத்திற்குட்பட்ட பகுதிகளில் போக்குவரத்து, பாதசாரிகளுக்கு இடையூறின்றி விளம்பரம் செய்தல் வேண்டும். நகரில் அதிகபட்சமாக 10க்கு 15 அடி அளவுள்ள விளம்பர தட்டிகளை மட்டுமே வைக்க அனுமதி உண்டு. கலெக்டர் அலுவலகம் மற்றும் தாசில்தார் அலுவலகம் முன் தவிர பிற இடங்களில் விளம்பரம் செய்ய அனுமதி வழங்கப்படும். தற்காலிக விளம்பர தட்டிகள் வைக்க ஒரு சதுர மீட்டருக்கு ரூ.50 கட்டணமாகும். கலெக்டரின் அனுமதி பெற்ற பின் நகராட்சி அலுவலகத்தில் ஒரு சதுர மீட்டருக்கு ரூ.50 வீதம் செலுத்திய பின்னரே விளம்பரத்தினை நிறுவ வேண்டும்.
21&01&2008ம் ஆண்டு ஜனவரி மாதம் 21ம் தேதி அரசு செய்தி வெளியீட்டின்படி நகரப்பகுதிகள் மற்றும் கிராமப்பகுதிகளில் விழாக்கள், நிகழ்ச்சிகள், அரசியல் கட்சி கூட்டங்களுக்காக வைக்கப்படும் விளம்பர தட்டிகள் அனைத்தும் விழாவுக்கு முன் 3 நாட்களும், பின் 2 நாட்களும் அனுமதி அளிக்கப்படும். அனுமதி காலம் முடிந்ததும் உரிமையாளரே அவற்றை அகற்ற வேண்டும். அனுமதி பெறாமல் வைக்கப்பட்டுள்ள விளம்பர தட்டிகள், கலெக்டரின் வழிகாட்டுல்படி தாசில்தார் மற்றும் நகராட்சி நிர்வாகத்தின் உதவியுடன் அகற்றப்படும். விளம்பர சட்டப்பிரிவு 5ன்படி விளம்பர தட்டிகளை அவ்வப்போது புதுப்பிக்க வேண்டும். கலெ க்டரின் அனுமதி பெறாமல் வைக்கப்படும் விளம்பரங் கள் உடனடியாக அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும், இவ்வாறு கலெக்டர் ஆபிரகாம் அறிவித்துள் ளார்.