பேரூராட்சிக்கு ரூ.15 லட்சம் வருவாய்
திருக்கழுக்குன்றம்: திருக்கழுக்குன்றம் பேரூராட்சிக்கு, 15 லட்சம் ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது. திருக்கழுக்குன்றம் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில், தனியார் சுயநிதி கல்வி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இவற்றின் மூலம், நடத்தப்படும், பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு, பேரூராட்சி நிர்வாகம் முறையாக வரி விதிக்கவில்லை. பெரும்பாலான கல்வி நிறுவனங்களின் உரிமையாளர்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள் என்பதால், கடந்த, 15 ஆண்டுகளாக, பேரூராட்சி அதிகாரிகள், வரி விதிக்க தயங்கி வந்தனர். இதனால், பேரூராட்சிக்கு, பல லட்சம் ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டது. இதுகுறித்து, “தினமலர்’ நாளிதழில் கடந்த மாதம் 15ம் தேதி, செய்தி வெளியிடப்பட்டது. அதைத் தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில், பேரூராட்சி நிர்வாகம், தனியார் சுயநிதி கல்லூரிகளுக்கு, 12 ஆண்டுகளுக்கு வரி விதித்தது. இதன் மூலம், பேரூராட்சிக்கு 15 லட்சம் ரூபாய் வருமானம் கிடைத்துள்ளது.
தினமலர் 18.04.2013