ஆத்தூர் நகராட்சியில் 15 லட்சம் செலவில் புதிய ஆழ்துளை கிணறு
ஆத்தூர்,: ஆத்தூர் நகராட்சியில் குடிநீர் தட்டுப்பாட்டை சமாளிக்க கி 15 லட்சம் செலவில் புதிய ஆழ்துளை கிணறு அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
சேலம் மாவட்டம் ஆத்தூர் நகராட்சியில் உள்ள 33 வார்டு பகுதி பொதுமக்களுக்கும் நகராட்சியின் மூலம் பாதுகாக்கப்பட்ட காவிரி குடிநீர் வீட்டு இணைப்புகளின் மூலம் வழங்கப்பட்டு வந்தது. தற்போது மேட்டூரிலிருந்து வரும் காவிரி நீரின் அளவு மிகவும் குறைவாக உள்ளதால் பொதுமக்களுக்கு போதிய குடிநீர் வழங்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
குடிநீர் தட்டுபாட்டை போக்க நகராட்சி மூலம் ஒவ்வொரு வார்டு பகுதிக்கும் லாரிகளின் மூலம் தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது. இருந்த போதிலும் பொதுமக்களுக்கு போதிய அளவு தண்ணீர் வழங்க முடியாத நிலை ஏற்பட்டு வருவதையடுத்து நிரந்தரமாக தண்ணீர் வரத்தை அதிகரிக்கும் பொருட்டு 2&வது வார்டு பகுதியில் உள்ள அய்யனார் கோயில் ஏரியின் உள் பகுதியில் புதியதாக போர்வெல் அமைத்து அதிலிருந்து தண்ணீர் எடுத்து ஆத்தூர் பொதுமக்களுக்கு வழங்க நகராட்சி மன்ற கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. அதன்படி, அய்யனார் கோயில் ஏரியில் கி 15 லட்சம் செலவில் 3 புதிய ஆழ்துளை கிணறுகள் அமைக்கும் பணியினை நகரமன்ற தலைவர் உமாராணி பிச்சக்கண்ணன் துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் நகரமன்ற உறுப்பினர்கள் ராமலிங்கம், வீராசாமி, குணசேகரன் செல்லக்கண்ணு உள்பட பலர் கலந்து கொண்டனர்.