தினமணி 31.07.2013
தினமணி 31.07.2013
குடிநீர் திருடியதாக 15 மின் மோட்டார்கள் பறிமுதல்
நகராட்சி ஆணையரின் நடவடிக்கை காரணமாக,
பெரியகுளத்தில் மின் மோட்டார் மூலம் தண்ணீர் திருடியதாக, திங்கள்கிழமை 15
மின் மோட்டார்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
பெரியகுளம் நகராட்சி உள்ள 30 வார்டுகளிலும் மின் மோட்டார் மூலம்
தண்ணீர் திருடுவதால், பெரும்பாலானோருக்கு குடிநீர் சரிவர கிடைக்காமல்,
அவதிப்பட்டு வரும் நிலை உள்ளது.
இந்நிலையில், தற்போது புதிதாக பொறுப்பேற்றுள்ள ஆணையர் ஆர். மகேஸ்வரி,
பொறியாளர் வி. சுப்பிரமணியன், சுகாதார ஆய்வாளர் டி. ஜெயசீலன், ஓவர்சீயர்
ஆர். பிரதாப் சந்திரன் மற்றும் துப்புரவுப் பணியாளர்கள் ஆகியோருடன்,
திங்கள்கிழமை நகர் பகுதியில் திடீர் சோதனை மேற்கொண்டார்.
அப்போது, 15 மின் மோட்டார்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இனிமேல், பொதுமக்கள் மின் மோட்டாரை பயன்படுத்தி குடிநீர் பிடிக்கக்
கூடாது என்றும், மீறி செயல்பட்டால் மின் மோட்டார் பறிமுதல்
செய்யப்படுவதோடு, சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும், ஆணையர்
ஆர். மகேஸ்வரி எச்சரிக்கை விடுத்துள்ளார்.