தினமணி 27.09.2013
உயர் கோபுர மின்விளக்கு அமைக்க ரூ.15 லட்சம் ஒதுக்கீடு
தினமணி 27.09.2013
உயர் கோபுர மின்விளக்கு அமைக்க ரூ.15 லட்சம் ஒதுக்கீடு
பெரியநாயக்கன்பாளையம் பேரூராட்சியில்
எல்.எம்.டபிள்யூ. பிரிவில் உயர் கோபுர மின்விளக்கு அமைப்பதற்கு கோவை
மக்களவை உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் ரூ.15 லட்சம் நிதி ஒதுக்கீடு
செய்துள்ளார்.
நான்கு சாலைகள் சந்திக்கும் இடமாக உள்ள இந்தப் பிரிவில், மின் விளக்கு
இல்லாததால் இரவு நேரங்களில் மக்கள் பெரும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.
மேலும், இப்பகுதியில் அடிக்கடி இங்கு விபத்துகளும் ஏற்படுகின்றன. இதைத்
தடுக்க பேரூராட்சித் தலைவர் பி.ஆர்.ஜி.அருண்குமார், இங்கு உயர் கோபுர
மின்விளக்கு அமைப்பதற்காக, கோவை மக்களவை உறுப்பினர் பி.ஆர்.நடராஜனிடம் நிதி
ஒதுக்கீடு செய்யக் கோரிக்கை விடுத்திருந்தார். இதையடுத்து, அவர் ரூ.15
லட்சம் ஒதுக்கீடு செய்தார். விரைவில் அப்பகுதியில் உயர் கோபுர மின்விளக்கு
அமைப்பதற்கான பணிகள் தொடங்கும் என பி.ஆர்.ஜி.அருண்குமார் தெரிவித்தார்.