தினத்தந்தி 21.11.2013
டிசம்பர் 15–ந் தேதிக்குள் குடிநீர் குழாயில் வால்வு பொருத்த அறிவுறுத்தல்
மேலப்பாளையம் மண்டலத்தில் உள்ள 19, 26, 27
ஆகிய பகுதிகளுக்கான புதிய குடிநீர் திட்டப் பணிகள் முடிவடைந்து,
முதல்–அமைச்சரால் தொடங்கி வைக்கப்பட்டது. இந்த திட்டம் மூலம் பயன்பெறும்
பொதுமக்கள் அனைவரும் தங்களுடைய குடிநீர் குழாய் இணைப்புகளில் “ப்ளோ
கண்ட்ரோல்“ எனப்படும் குடிநீர் கட்டுப்படுத்தும் கருவியை குடிநீர் குழாயில்
இணைக்க வேண்டும். பெரும்பாலான வீடுகளில் இது பொருத்தப்படாமல் உள்ளது.
அடுத்த மாதம் (டிசம்பர்) 15–ந் தேதிக்குள்
அதற்குரிய கட்டணத்தை செலுத்தி வால்வு பெற்று இளநிலை பொறியாளர்
முன்னிலையில் பொருத்தும் பணியை மேற்கொள்ள வேண்டும். தவறும் பட்சத்தில்
எவ்வித அறிவிப்பும் இன்றி குடிநீர் குழாய் இணைப்புகள் துண்டிக்கப்படும்.
மேலும் விவரங்களுக்கு உதவி செயற்பொறியாளர்–9442201305, இளநிலை பொறியாளர்– 9442201334 என்ற செல்போன் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
இந்த தகவல் நெல்லை மாநகராட்சி ஆணையாளர் (பொறுப்பு) த.மோகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.