தினமலர் 31.12.2009
புதிய திருப்பூர் பகுதி மேம்பாட்டு கழகத்துக்கு எதிராக போராட திட்டம்: 15 வேலம்பாளையம் நகராட்சி நிர்வாகம் எச்சரிக்கை
திருப்பூர்: “திருப்பூர் 15 வேலம்பாளை யம் நகராட்சிக்கு சப்ளை செய்ய வேண்டிய குடிநீர் அளவை, ஒப்பந்தப்படி வழங்க வேண்டும். இல்லையெனில், புதிய திருப்பூர் பகுதி மேம் பாட்டு கழக அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டம் நடத்தப்படும்‘ என, நகராட்சி தலைவர் மணி எச்சரித்துள்ளார்.
திருப்பூர், 15 வேலம்பாளையம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதி களுக்கு, புதிய திருப்பூர் பகுதி மேம்பாட்டு கழகத்தால், தினமும் 33 லட்சம் லிட்டர் கொள்ளளவு குடிநீர் வழங்கப்பட்டு வந்தது. இந்த அளவு படிப்படியாக குறைக்கப்பட்டுள்ளது. இதனால், பொதுமக்களுக்கு தேவையான அளவு குடிநீர் வழங்க முடியாமல், நகராட்சி நிர்வாகம் தடுமாறி வரு கிறது. நிர்ணயிக்கப்பட்ட அளவை குறைக்காமல், ஒப்பந்தப்படி குடி நீர் வழங்கக்கோரி, புதிய திருப்பூர் பகுதி மேம்பாட்டு கழகத்துக்கு நகராட்சி தலைவர் மணி கடிதம் அனுப்பியுள்ளார்.
அக்கடித விபரம்: 15 வேலம்பாளையம் நகராட் சிக்கு, புதிய திருப்பூர் பகுதி மேம் பாட்டு கழகம் நாளொன்றுக்கு 33 லட்சம் குடிநீர் வழங்க வேண்டும்; மாதம் ஒன்றுக்கு ஒரு கோடி லிட் டர் குடிநீர் குறைவாக வழங்கப் பட்டு வருகிறது. கடந்த மூன்று மாதங்களில் 3.5 கோடி லிட்டர் குறைவாக வழங்கப்பட்டுள்ளது. இதனால், பொதுமக்களுக்கு சரிவர குடிநீர் வழங்க முடியவில்லை; 10 அல்லது 15 நாட்களுக்கு ஒரு முறையே சப்ளை செய்ய முடிகிறது. இப்பிரச்னை தொடர்பாக, செயல் அலுவலரும், நகராட்சி பொறியாளரும் பலமுறை வலி யுறுத்தியுள்ளனர்; செயல் அலுவ லரும் கடிதம் அனுப்பியுள்ளார்; எந்த முன்னேற்றமும் இல்லை.
ஒப்பந்தப்படி, எங்கள் நகராட் சிக்கு தினமும் கொடுக்க வேண் டிய 33 லட்சம் லிட்டர் குடிநீரும், மூன்று மாதங்களாக சப்ளையை குறைத்து, நிலுவை வைத்துள்ள குடிநீரையும் வழங்க வேண்டும். இல்லையெனில், எனது தலை மையில் அனைத்து கவுன்சிலர் களும் சேர்ந்து, புதிய திருப்பூர் பகுதி மேம்பாட்டு கழக அலுவல கத்தில் உள்ளிருப்பு போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளோம். இதன்பின்பும் உடன்படவில்லை எனில், நகராட்சி மக்களை திரட்டி, புதிய திருப்பூர் பகுதி மேம்பாட்டு கழக நீரேற்று நிலையம் முன் போராட வேண்டியிருக்கும். எனவே, ஒரு வாரத்துக்குள் முறையான அறி விப்பை வெளியிட வேண்டும். இவ்வாறு, நகராட்சி தலைவர் மணி கூறியுள்ளார்.
இதுதொடர்பாக, புதிய திருப் பூர் பகுதி மேம்பாட்டு கழக பொது மேலாளர் பழனிச்சாமியிடம் கேட்ட போது, “”எங்களது நிறு வனத்தால் கொடுக்கப்படும் குடி நீரின் அளவில், எவ்விதமான மாற் றமும் செய்யவில்லை; தற்போதும் 33 லட்சம் லிட்டர் குடிநீர் வழங்க, நாங்கள் தயாராக உள்ளோம்; திருப் பூர் மாநகராட்சி மற்றும் 16 ஊராட்சி களுக்கு குடிநீர் வழங்கி வரு கிறோம்; இதுவரை எவ்விதமான குறைபாடும் இல்லை. அப்படியே குறைபாடு இருந்தாலும், ஒரு லிட் டர் அளவுக்கே இருக்கும்; இதுவும் “பவர் சப்ளை ‘ ஏற்பட்டு இருந் தால் மட்டுமே குறையும். 15 வேலம்பாளையம் நக ராட்சியை பொறுத்தவரை எவ்வித மான குறைபாடுகளும் இருக்க வாய்ப்பில்லை. நிலுவைத்தொகை இல்லாமல் உரிய தேதியில் பணம் செலுத்தி வருகின்றனர்; அதற் கேற்ப, நாங்களும் குடிநீர் வழங்கி வருகிறோம்; எடுத்து செல்வதற்கோ, முறையாக வினியோகம் செய் வதற்கோ, போதுமான வசதிகள் இல் லாமல் இருக்கலாம்,” என்றார