தினமலர் 26.11.2010
நகராட்சிக்கு வரியினங்களை டிச
. 15.,க்குள் செலுத்த “கெடு‘உடுமலை
: நகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரியினங்களை டிச., 15 க்குள் செலுத்திட நகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது. உடுமலை நகராட்சி ஆணையாளர் சுந்தராம்பாள் அறிக்கை: உடுமலை நகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்து வரி, குடிநீர் கட்டணம், காலியிட வரி, தொழில்வரி, நகராட்சி கடை வாடகைகள், லைசென்ஸ் கட்டணங்கள் ஆகிய வரியினங்களை டிச., 15க்குள் நகராட்சி கணிணி மையத்தில் செலுத்தி ரசீது பெற்றுகொள்ள வேண்டும். அனைத்து சனிக்கிழமை நாட்களிலும் வசூல் மையம் செயல்படும். நிர்ணயிக்கப்பட்ட தேதிக்கு பின்பும் வரியினங்களை செலுத்தாமல் இருந்தால் எவ்வித முன்னறிவிப்புமின்றி குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படும். கடைகள் பூட்டி சீல் வைத்து நகராட்சி பொறுப்பில் எடுத்து கொள்ளப்படும். சொத்து வரி செலுத்தாத வீடுகளை பூட்டி சீல் வைத்தல் மற்றும் ஜப்தி நடவடிக்கையும், காலியிடங்கள் நகராட்சி கட்டுப்பாட்டில் கையகப்படுத்தப்படும். சட்டபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்வதை தவிர்க்க நகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரியினங்களை உடனடியாக செலுத்தி ஒத்துழைப்பு வழங்க வேண்டும்‘, என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.