தினமணி 14.09.2010
நகராட்சி ஊழியர் குடும்பத்துக்கு ரூ 1.50 லட்சம் காப்பீட்டு நிதி
விழுப்புரம், செப்.13: பணியின்போது இறந்த விழுப்புரம் நகராட்சி துப்புரவுத் தொழிலாளியின் குடும்பத்துக்கு குழு காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் ரூ 1.50 லட்சத்துக்கான காசோலையை நகர்மன்றத் தலைவர் இரா. ஜனகராஜ் திங்கள்கிழமை வழங்கினார்.
÷துப்புரவுத் தொழிலாளி செல்வரங்கன் செங்கேணியின் மனைவி மல்லிகா அந்த நிதியை பெற்றுக் கொண்டார். நிகழ்ச்சியில் துணைத் தலைவர் பார்த்திபன், நகர்மன்ற உறுப்பினர்கள் ரகுபதி, கலைவாணன், சிவா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.