தினமணி 10.02.2014
1.50 லட்சம் கொசு வலைகள்: மாநகராட்சி டெண்டர் வெளியீடு
தினமணி 10.02.2014
1.50 லட்சம் கொசு வலைகள்: மாநகராட்சி டெண்டர் வெளியீடு
சென்னையில் உள்ள ரேஷன் அட்டைதாரர்களுக்கு விநியோகம்
செய்ய கூடுதலாக 1.5 லட்சம் கொசு வலைகளை கொள்முதல் செய்ய சென்னை மாநகராட்சி
டெண்டர் வெளியிட்டுள்ளது.
சென்னையின் நீர்வழிப்பாதைகளின் அருகில் வசிக்கும் ஏழைகளுக்கு இலவச கொசு
வலைகள் வழங்கப்படும் என்று சென்னை மாநகராட்சி அறிவித்திருந்தது. இதன்படி
முதலில் 5 லட்சம் கொசு வலைகளை தனியார் நிறுவனத்திடம் இருந்து மாநகராட்சி
கொள்முதல் செய்தது.
பின்னர் சென்னையில் பச்சை நிற ரேஷன் அட்டைகள் வைத்துள்ள அனைவருக்கும்
இலவச கொசு வலைகள் கொடுக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி, கொசு வலைகள்
விநியோகம் செய்யும் பணிகள் தொடங்கப்பட்டு, விநியோகிக்கப்பட்டு வருகிறது.
இப்போது சென்னையில் சுமார் 11 லட்சம் பச்சை நிற ரேஷன் அட்டைதாரர்கள்
உள்ளனர் என கணக்கிடப்பட்டுள்ளது. இவர்களுக்கான கொசு வலைகளை கொள்முதல்
செய்யும் நடவடிக்கைகளை மாநகராட்சி அதிகாரிகள் மேற்கொண்டு வந்தனர்.
இதன் ஒரு பகுதியாக, ரூ. 2.25 கோடி மதிப்பில் 1.5 லட்சம் கொசு வலைகளை
கொள்முதல் செய்ய மாநகராட்சி டெண்டர் வெளியிட்டுள்ளது. வரும் பிப்ரவரி
28-ஆம் தேதி டெண்டர் விடப்படும் என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.