தினமணி 5.11.2009
ரூ.1.6 லட்சம் வரை வீட்டுக் கடன்: ஆட்சியர்
தருமபுரி, நவ.4: வீடு கட்ட ரூ.1.6 லட்சம் வரை கடன் வழங்கப்படும் என தருமபுரி மாவட்ட ஆட்சியர் பெ.அமுதா தெரிவித்துள்ளார்.
இது குறித்து புதன்கிழமை அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
மத்திய அரசு திட்டத்தில் பேரூராட்சி, நகரப் பகுதியில் வசிக்கும் மாத வருவாய் ரூ.5 ஆயிரத்திலிருந்து ரூ.10 ஆயிரத்துக்குள் இருப்பவர்களுக்கு 40 சதுர மீட்டர் பரப்பளவில் வீடு கட்ட வங்கிக் கடன் வழங்கப்பட உள்ளது.
தகுதியுள்ள பயனாளிகள் நிலப்பட்டா, வருமான சான்றிதழ், குடும்ப அட்டையுடன் ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.
