சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ.1.62 லட்சம் சுழல்நிதி
திண்டிவனம் நகராட்சி சார்பில் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு சுழல்நிதியை நகர்மன்ற தலைவர் கே.வி.என்.வெங்கடேசன் புதன்கிழமை வழங்கினார்.
பொன் விழா ஆண்டு நகர்ப்புற வேலை வாய்ப்புத்திட்டத்தின் கீழ், திண்டிவனம் நகராட்சியில் ஆண்டுதோறும் சிறப்பாக செயல்பட்டு வரும் சுய உதவிக்குழுக்களுக்கு சுழல்நிதி வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு 2012-2013ம் ஆண்டிற்கு முதிர்வின் அடிப்படையில் 8 குழுக்களுக்கு 1 லட்சத்து 62 ஆயிரத்து 178 ரூபாய் சுழல் நிதியாக வழங்கப்பட்டது. திண்டிவனம் நகர்மன்ற தலைவர் கே.வி.என்.வெங்கடேசன் குழுக்களுக்கு சுழல் நிதிக்கான காசோலைகளை வழங்கினார். ஆணையர் எஸ்.அண்ணாதுரை முன்னிலை வகித்தார். வருவாய் ஆய்வாளர் அண்ணாதுரை வரவேற்றார். ஏற்பாடுகளை சமுதாய அமைப்பாளர் ஜெயஸ்ரீபிரபா செய்திருந்தார்.