தினமலர் 18.06.2010
கீழக்கரையில் வீடுகள் தோறும் குடிநீர் இணைப்பு ரூ166.63 லட்சம் மதீப்பீட்டில் காவிரி நீர் திட்டம் ஆணையர்கீழக்கரை: “”கீழக்கரை நகராட்சியில் குடிநீர் தட்டுப் பாட்டிற்கு நிரந்தர தீர்வு காணும் வகையில் 166.63 லட்சம் மதிப்பீட்டில் குழாய்கள் பதிக்கும் பணி அடுத்த மாதம் (ஜூலை) துவங்கப்படுவதாகவும்,அதன் பின் வீடுகள் தோறும் குடிநீர் இணைப்புகள் வழங்கப்படும்,” என, நகராட்சி ஆணையாளர் சுந்தரம் தெரிவித்தார். மேலும் அவர் கூறியதாவது: கீழக்கரை நகராட்சியில் நான்கு மற்றும் ஐந்து லட்சம் லிட்டர் கொண்ட குடிநீர் தொட்டிகள் உள்ளன. தற்போது கூடுதலாக 10 லட்சம் லிட்டர் நீரை சேமிக்கும் வகையில் புதிய தொட்டி கட்டப்படுகிறது.பழைய குடிநீர் குழாய்கள் முற்றிலும் அகற்றப்பட்டு, புதிய குழாய்கள் பதிக்கும் பணியும் அடுத்த மாதம் துவங்கப்பட உள்ளது. 732 குடிநீர் இணைப்புகள் உள்ள நிலையில் அனைத்து வீடுகளுக்கும் இணைப்புகள் வழங்க முடிவு செய்யப்பட்டுள் ளது.வீடுகளுக்கு ஐந்து ஆயிரம்,கடைகளுக்கு 10 ஆயிரம் ரூபாய் முன்பணம் செலுத்த வேண்டும். தற்போது நகராட்சி அலுவலகத்தில் பெயர்கள் பதிவு நடைபெறுவதால் கட்டணத்தை செலுத்தி பதிவு செய்து கொள்ளலாம், என்றார்.நகராட்சி தலைவர் பஷீர் அகமது உடன் இருந்தார்.