தினமணி 11.02.2014
பிப்.17-இல் பெங்களூரு மாநகராட்சி பட்ஜெட்
தினமணி 11.02.2014
பிப்.17-இல் பெங்களூரு மாநகராட்சி பட்ஜெட்
பெங்களூரு மாநகராட்சியின் 2014-15-ஆம் ஆண்டுக்கான
பட்ஜெட் வருகிற 17-ஆம் தேதி மாமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என்று
மாநகராட்சி மேயர் சத்தியநாராயணா தெரிவித்தார்.
இதுகுறித்து பெங்களூருவில் திங்கள்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியது:
2014-15-ஆம் நிதியாண்டுக்கான மாநகராட்சி பட்ஜெட் வருகிற 17-ஆம் தேதி
முற்பகல் 11 மணிக்கு தாக்கல் செய்யப்படும். இதைத் தொடர்ந்து பட்ஜெட்
தயாரிப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
நிகழாண்டு நடைமுறை சாத்தியமான பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். பிப்.20,21 ஆகிய தேதிகளில் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெறும்.
“நமது பெங்களூரு, எனது பங்களிப்பு’ என்ற திட்டத்தில் பங்கெடுக்க
மருத்துவம், பொறியியல் கல்லூரிகள் ஆர்வம் காட்டியுள்ளன. இந்தக்
கல்லூரிகளின் நிர்வாகிகள் பங்கேற்கும் ஆலோசனைக் கூட்டம் வெகுவிரைவில்
நடத்தப்படும்.
மாநகராட்சியின் மருத்துவமனைகளை மருத்துவக் கல்லூரிகளும், மாநகராட்சியின்
பள்ளிகளை பொறியியல் கல்லூரிகளும் மேம்படுத்த அறிவுறுத்தப்படும்.
இதுதொடர்பாக ஒப்பந்தம் செய்து கொள்ளும் விழாவில் முதல்வர் சித்தராமையா
கலந்து கொள்வார் என்றார் அவர்.