தினமணி 20.07.2010
தத்தனேரி மயானம் ரூ.1.75 கோடியில் சீரமைப்புமதுரை
, ஜூலை 19: மதுரை தத்தனேரி மயானம் ரூ.1.75 கோடியில் மாநகராட்சியால் சீரமைக்கும் பணி துவங்கியது.செல்லூர் பகுதியில் உள்ளது தத்தனேரி மயானம்
. இங்கு நாள் ஒன்றுக்கு சராசரியாக 20 சடலங்கள் எரிக்கப்படுவதாகவும், 20 சடலங்கள் புதைக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. இந் நிலையில், இந்த மயானத்தில் அடிப்படை வசதிகள் மேற்கொள்ள வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டது.இதையடுத்து மாநகராட்சி பராமரிப்பு மற்றும் அபிவிருத்தித் திட்டத்தின்கீழ் ரூ
.1.75 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு, தற்போது அடிப்படைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதில், கட்டடப் பராமரிப்பு, வாகனங்கள் நிறுத்தும் வசதி, கழிப்பறை, சுற்றுச்சுவர் அமைத்தல், முடியிறக்கம் செய்யும் அறை, ஆழ்குழாய் கிணறு அமைப்பது, சிமெண்ட் சாலை, சடலங்கள் புதைப்பதற்கான இடத்தில் உள்ள முள்புதர்களை அகற்றி நடைபாதை அமைத்தல், மின் மயானக் கூண்டு போன்ற வசதிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பழைய தகன மேடை மட்டும் ரூ.65 லட்சத்தில் பராமரிக்கப்பட்டு வருகிறது.