தினத்தந்தி 08.01.2014
திருமுருகன்பூண்டி பேரூராட்சியில் 1,796 பயனாளிகளுக்கு பொங்கல் பரிசு

தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதா பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 1 கிலோ
பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, இதர பொருட்கள் வாங்க ரூ.100 ரொக்கம் ஆகியவை
அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு திட்டத்தை தொடங்கி வைத்தார்.
இதைத்தொடர்ந்து திருப்பூர் திருமுருகன்பூண்டியில் உள்ள ராக்கியாபாளையம்
தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க வளாகத்தில் நடந்த விழாவுக்கு
பேரூராட்சி துணைத் தலைவர் விசுவநாதன் தலைமை தாங்கினார். சங்க தலைவர்
பழனிச்சாமி, துணைத் தலைவர் சுப்பிரமணி மற்றும் நிர்வாகக்குழு உறுப்பினர்கள்
முன்னிலை வகித்தனர். அவினாசி மாவட்ட வழங்கல் அலுவலர் சாந்தி வரவேற்று
பேசினார். அவினாசி எம்.எல்.ஏ.கருப்பசாமி பயனாளிகளுக்கு பொங்கல் பரிசுகளை
வழங்கினார்.
இதைத்தொடர்ந்து குமரன் காலனி, பாரதி நகர், உமையஞ்செட்டிபாளையம்,
அணைப்புதுர், கோபால்டு மில் ஆகிய பகுதிகளில் உள்ள ரேஷன் கடைகளுக்கு சென்று
1,796 பயனாளிகளுக்கு பொங்கல் பரிசுகளை வழங்கினார். விழாவில் முன்னாள்
பேரூராட்சி தலைவர்கள் லதா, கோபால், அ.தி.மு.க. அவைத் தலைவர் கணேசன், ஒன்றிய
செயலாளர் சுப்பிரமணி, ராசு என்கிற பழனிச்சாமி, சேகர் உள்பட பலர் கலந்து
கொண்டனர். முடிவில் சங்க செயலாளர் அவினாசிலிங்கம் நன்றி கூறினார்.