தினத்தந்தி 08.07.2013
18 பேருக்கு இலவச வீட்டு மனைகள் மேயர் வழங்கினார்
கோவை மாநகராட்சி வடவள்ளி 16, 17 வார்டுக்குட்பட்ட பெண்களுக்கு தமிழக
முதல்–அமைச்சரின் சிறப்புத் திட்டத்தின் கீழ் விலையில்லா மிக்சி, கிரைண்டர்
மற்றும் மின்விசிறி வழங்கும் விழா, இலவச வீட்டுமனை பட்டா வழங்கும்
நிகழ்ச்சி வடவள்ளி அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. விழாவிற்கு கோவை
வடக்கு சட்டமன்ற உறுப்பினர் தா.மலரவன் தலைமை தாங்கினார். விழாவில் 7,249
பெண்களுக்கு ரூ.3 கோடி மதிப்பிலான விலையில்லா மிக்சி, கிரைண்டர்,
மின்விசிறி, கல்வீரம்பாளையம் பகுதியைச் சேர்ந்த 18 பயனாளிகளுக்கு ரூ.37
லட்சம் மதிப்பிலான இலவச வீட்டுமனைப் பட்டா ஆகியவற்றை மேயர் செ.ம.வேலுசாமி
வழங்கினார்

நிகழ்ச்சியில் மண்டல தலைவர்கள் சாவித்திரி பார்த்திபன்,
கே.ஆர்.ஜெயராமன், கோவை தெற்கு தாசில்தார் (பொறுப்பு) ரபிஅகமத்,
கவுன்சிலர்கள் குணசுந்தரி, மயில்சாமி,ஜெயந்தி, எஸ்.மணிமேகலை, துணை
தாசில்தார் உமாமகேஸ்வரி, லட்சுமணன், வருவாய் ஆய்வாளர் மணிமேகலை உட்பட பலர்
கலந்து கொண்டனர்.