தினத்தந்தி 16.12.2013
வருகிற 18–ந் தேதி முதல் அனுப்பானடி, நெல்பேட்டையில் தான் ஆடுவதை செய்ய வேண்டும் மேயர் ராஜன் செல்லப்பா அறிவிப்பு

வருகிற 18–ந் தேதி முதல் அனுப்பானடி, நெல்பேட்டையில் தான் ஆடுவதை செய்ய வேண்டும் என்று மேயர் ராஜன் செல்லப்பா அறிவித்துள்ளார்.
நீர்தேக்க தொட்டி
மதுரை மாநகராட்சி 50–வது வார்டு
நெல்பேட்டை காயிதே மில்லத் நகரில் ஆடுவதை கூடம் பயன்பாடற்று கிடந்தது. எனவே
இந்த கூடத்தை மாநகராட்சி சார்பில் சீரமைக்கும் பணி நடந்தது. அதற்காக
டைல்ஸ் அமைத்து மேற்கூரை அமைக்கப்பட்டது. மேலும் ஆழ்துழாய் கிணறு, மேனிலை
நீர்தேக்க தொட்டி, கழிப்பறைகள் மற்றும் பேவர் பிளாக் என ரூ.55 லட்சத்து 60
ஆயிரத்தில் பணிகள் நடந்தன.
இந்த சீரமைப்பு பணிகள் முடிந்ததால், திறப்பு விழா நடந்தது. மேயர் ராஜன் செல்லப்பா கலந்து கொண்டு ஆடுவதை கூடத்தை திறந்து வைத்தார்.
மாசில்லா நகரம்
பின்னர் அவர் பேசியதாவது:–
தமிழக முதல்–அமைச்சரின் ஆலோசனையின்படி
மதுரை மாநகராட்சியை மாசில்லா நகரமாக்க வேண்டும் என்பதற்காக பல்வேறு
திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். அதன்படி இந்த ஆடுவதை செய்யும் இடம்
சுகாதரமான முறையில் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த இடத்தினை சுத்தமாக பரமாரிக்க வேண்டும்.
அனுப்பானடி நவீன ஆடுவதை கூடமும்
சீர்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக கோட்டை சுவர் உயர்த்தும் பணி,
நடைபாதை அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
18–ந் தேதி முதல்…
மதுரை மாநகராட்சிக்கு எல்லைக்கு உட்பட்ட
ஆடுவதை செய்பவர்கள் அனுப்பானடி அல்லது நெல்பேட்டை ஆடுவதை செய்யும்
இடங்களில் தான் வருகிற 18–ந் தேதி முதல் ஆடுவதை செய்ய வேண்டும். வேறு
இடங்களில் ஆடுவதை செய்யக்கூடாது.
இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில் கமிஷனர் கிரண்குராலா,
அண்ணாத்துரை எம்.எல்.ஏ., துணை மேயர் கோபாலகிருஷ்ணன், நகர் பொறியாளர்
மதுரம், உள்பட பலர் கலந்து கொண்டனர்.