தினகரன் 05.10.2010
குழித்துறை நகராட்சியில் ரூ1.80 கோடியில் சாலைகள் சீரமைப்புமார்த்தாண்டம், அக்.5: தமிழக அரசின் கிராம, நகர சாலை மேம்பாட்டு திட்ட நிதியின் கீழ் அனைத்து மாவட்ட சாலைகளையும் மேம்படுத்த நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. குழித்துறை நகராட்சிக்கு ரூ1.5 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து நகராட்சி தலைவர் பொன்.ஆசைதம்பி கூறியதாவது:
நகராட்சி பகுதியில் உள்ள சாலைகளை சீரமைக்க அரசு ரூ1.5 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இதில் ரூ25 லட்சத்தில் சப்பாத்துசாலை, ரூ12 லட்சத்தில் நரியன்விளை சாலை, ரூ20 லட்சத்தில் பழவார் சாலை, ரூ18.5லட்சத்தில் தேவிகுமாரி பெண்கள்கல்லூரிசாலை, ரூ12.5லட்சத்தில் விளவங்கோடு சாலை, ரூ22.75 லட்சத்தில் காட்டுவிளை சாலை, ரூ22.25 லட்சத்தில் கல்பாலத்தடிதேவர் குளம் சாலை, ரூ10 லட்சத்தில் காரவிளைசாலை, ரூ7லட்சத்தில் இடைதெருசாலை ஆகியவை 3.5 கிலோமீட்டர் தூரத்துக்கு சிமென்ட் சாலையாக மாற்றப்படுகிறது.
கழிவுநீர் ஓடைகளும் சீரமைக்கப்படும். இது தவிர நகராட்சி பொது நிதியில் இருந்து ரூ30லட்சம் செலவில் கொடுங்குளம் உள்ளிட்ட பலசாலைகள் சீரமைக்க பட உள்ளது. இந்த பணிகள் அனைத்தும் இம்மாத இறுதியில் தொடங்கப்பட்டு டிசம்பர் மாதம் இறுதிக்குள் முடிக்கப்படும் என்றார். பொன் ஆசைத்தம்பி தகவல்