தினமலர் 27.08.2010
வெள்ளகோவில் நகராட்சியில் ரூ. 1.82 கோடிக்கு வளர்ச்சி பணி
வெள்ளகோவில்: “”வெள்ளகோவில் நகராட்சியில் 1.82 கோடி ரூபாய் மதிப்பிலான வளர்ச்சிப் பணிகள் நடந்துள்ளன,” என, நகராட்சித் தலைவர் சாந்தி கந்தசாமி கூறினார்.
மேலும், அவர் கூறியதாவது:மாநில நிதிக்குழு நிதி 85 லட்சம் ரூபாயில் 2008-09ல் வளர்ச்சி பணி, 2009-19ல் பகுதி இரண்டு திட்டத்தில் 10 லட்சம் ரூபாயிலும் வளர்ச்சி பணி நடந்ததுள்ளது.எம்.எல்.ஏ., தொகுதி வளர்ச்சி நிதி 40 லட்சம் ரூபாய் செலவில் பல்வேறு பணிகள் நடந்துள்ளன. காமராஜபுரம் பஞ்சாயத்து யூனியன் துவக்கப்பள்ளி சத்துணவு மையக் கட்டிடம், சீரங்கராயக் கவுண்டன்வலசு முதல் கோவை – திருச்சி ரோடு வரை ரோடு மேம்பாடு, உப்புப்பாளையத்தில் வடிகால் வசதி செய்யப்பட்டுள்ளது. இந்திராநகர் வடக்கு, உப்புபாளையம் காலனி, தண்ணீர்பந்தல் வடக்கு, எம்.ஜி.ஆர்., நகர், சாமிநாதன் நகர், அகலரைபாளையம் புதூர், ராஜிவ் நகர், சொரியங்கிணத்துப்பாளையம், தீத்தாம்பாளையம் காலனி ஆகிய இடங்களில் ஆழ்குழாய் கிணறு அமைத்து, மின் மோட்டார் பொருத்தி குடிநீர் வசதி செய்யப்பட்டுள்ளது. குமாரவலசு, காந்திநகர், குட்டக்காட்டு புதூர், சொரியங்கிணத்துப்பாளையம் பகுதியில் ரோடு மேம்பாடு நடந்துள்ளது.
காந்திநகர், குட்டக்காட்டுப்புதூரில், உப்புப்பாளையம் பகுதியில் தார்சாலை புதுப்பித்தல், பழைய உரக்கிடங்கு சுற்றுச்சுவர் ஆகிய பணிகள் 12வது நிதிக்குழு மானிய நிதி 7.50 லட்சம் ரூபாய் செலவில் மேற்கொள்ளப்பட்டன.
எம்.பி., தொகுதி மேம்பாட்டு நிதி 20 லட்சம் ரூபாயில், கரட்டுப்பாளையம் ஆழ்குழாய், வெள்ளகோவில் எல்.கே.சி.,நகரில் எரிவாயு தகன மேடை ஆகிய பணிகள் மேற்கொள்ளப்பட்டன. சுவர்ண ஜெயந்தி திட்டத்தில் 2009-2010ல், நடேசன்நகர் சமுதாயக்கூடம், அம்மன்கோவில் முதல் கச்சேரிவலசு வரை வடிகால் பணி நடந்தது.பொது நிதியில் அம்மன் கோவில் வீதி, கரட்டுபாளையம், மூலனூர் ரோடு, குமாரவலசு ரோடு மேற்கு பள்ளி, ரெட்டிவலசில் குடிநீர் குழாய் விஸ்தரிப்பு, நாச்சியப்பகவுண்டன்வலசு பொது கிணற்றில் மின் மோட்டார் பொருத்துதல், கரட்டுப்பாளையம் (அ) பகுதியில் பாலம், ஆகிய பணிகள் நடந்துள்ளன. மொத்தம் 1.82 கோடி ரூபாய் மதிப்பில் பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன.