தினமணி 02.09.2013
தினமணி 02.09.2013
ரூ.1.83 கோடியில் வளர்ச்சிப் பணிகள்
கிருஷ்ணகிரியில் ரூ. 1.83 கோடியில் சாலை மற்றும்
மழைநீர் கால்வாய் அமைக்கும் பணியை அமைச்சர் கே.பி.முனுசாமி ஞாயிற்றுக்கிழமை
தொடக்கி வைத்தார்.
பழையபேட்டை வார்டு எண் 7-இல் நேதாஜி சாலை மற்றும் பைசுல்லா நகர் சாலை
வரை ரூ. 76 லட்சத்தில் சாலை மற்றும் மழைநீர் கால்வாய் அமைக்கும் பணி
மற்றும் வார்டு எண் 22-இல் ரூ. ஒரு கோடியே 7 ஆயிரம் மதிப்பில் சாலை மற்றும்
மழைநீர் கால்வாய் அமைக்கும் பணியை அமைச்சர் கே.பி.முனுசாமி தொடக்கி
வைத்தார். இந்தப் பணிகளை விரைந்து முடிக்கவும் அதிகாரிகளுக்கு அமைச்சர்
உத்தரவிட்டார்.
மேலும், அந்தப் பகுதி பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களைப் பெற்று, அவை மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
இந்த நிகழ்ச்சியில், மாவட்ட ஊராட்சித் தலைவர் கே.அசோக்குமார், தருமபுரி
மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் பி.என்.ஏ.கேசவன், நகர்மன்றத்
தலைவர் கே.ஆர்.சி.தங்கமுத்து, ஒன்றியக் குழுத் தலைவர்கள் கோவிந்தராஜ்,
ஜெயபாலன், முனியப்பன், நகராட்சி ஆணையாளர் டாக்டர். இளங்கோவன், நகராட்சிப்
பொறியாளர் சிவக்குமார், நகர அமைப்பு அலுவலர் பாஸ்கரன் உள்ளிட்டோர் கலந்து
கொண்டனர்.’