தினமலர் 22.02.2010
பெரம்பலூரில் ரூ.1.88 கோடி தார்சாலை பணிகள் ஆய்வு
பெரம்பலூர்: பெரம்பலூர் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ஒரு கோடியே 88 லட்சம் ரூபாய் மதிப்பில் தார்சாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது என பெரம்பலூர் நகராட்சி தலைவர் ராஜா தெரிவித்தார்.பெரம்பலூர் நகராட்சிக்குட்பட்ட 6,7,8,9,11,14,15,20,21 ஆகிய வார்டு பகுதிகளில்ஒரு கோடியே 88 லட்சம் ரூபாய் மதிப்பில் �ர்சாலை அமைக்கும் பணி தற்போது நடந்து வருகிறது.பெரம்பலூர் வடக்குமாதவி சாலையில் 6வது வார்டு சாமியப்பா நகரில் 23 லட்சம் ரூபாய் மதிப்பில் தார் சாலை அமைக்கும் பணியை பெரம்பலூர் நகராட்சி தலைவர் ராஜா பார்வையிட்டார்.
பின்னர் நகராட்சி தலைவர் ராஜா நிருபர்களிடம் கூறியதாவது: பெரம்பலூர் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 28.5 கோடி மதிப்பில் பாதாள சாக்கடை திட்டத்தின்கீழ் குழாய்கள் அமைப்பட்டுள்ளன. பாதாள சாக்கடை பணிகள் முடிவுற்ற வார்டு பகுதிகளில் நகர்புற சாலை மேம்பாட்டு திட்டம் மற்றும் பெரம்பலூர் நகராட்சி பொது நிதியிலிருந்து ஆறாவது வார்டில் 23 லட்சம் ரூபாய் மதிப்பிலும், ஏழாவது மற்றும் 14 வார்டில் 24 லட்சம் ரூபாய் மதிப்பிலும், எட்டாவது வார்டில் 14.5 லட்சம் ரூபாய் மதிப்பிலும், ஒன்பதாவது வார்டில் 13 லட்சம் ரூபாய் மதிப்பிலும், 11வது வார்டில் 30 லட்சம் ரூபாய் மதிப்பிலும், 15வது வார்டில் 16 லட்சம் மதிப்பிலும், 20வது மற்றும் 21வது வார்டில் 54 லட்சம் ரூபாய் மதிப்பிலும் என ஒரு கோடியே 88 லட்சம் மதிப்பில் தார் சாலைகள் அமைக்கும் பணி நடந்து வருகிறது என்றார