தினமணி 17.02.2014
பெங்களூருவில் 198 வார்டுகளில் திடக்கழிவு மேலாண்மை மையங்கள்
தினமணி 17.02.2014
பெங்களூருவில் 198 வார்டுகளில் திடக்கழிவு மேலாண்மை மையங்கள்
பெங்களூருவில் 198 வார்டுகளில் திடக்கழிவு மேலாண்மை
மையங்கள் அமைக்கப்படும் என்று, கர்நாடக போக்குவரத்துத் துறை அமைச்சர்
ராமலிங்க ரெட்டி தெரிவித்தார்.
பெங்களூரு பைரசந்திரா வார்டில் ரூ. 20 லட்சத்தில் அமைக்கப்பட்டுள்ள
திடக்கழிவு மேலாண்மை மையத்தை ஞாயிற்றுக்கிழமை திறந்துவைத்து அவர் பேசியது:
பெங்களூருவில் குப்பை பிரச்னை தீர்க்கப்படாமல் இருப்பது
வருத்தமளிக்கிறது. இந்த பிரச்னைக்கு தீர்வு காண அரசு பல்வேறு நடவடிக்கைகளை
எடுத்து வருகிறது. நமது சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக் கொள்வது
பொதுமக்களின் கடைமையாகும்.
குப்பைகளை சேகரித்து, அதை வகைப் பிரித்து குறிப்பிட்ட இடத்தில் மட்டுமே
குப்பைகளை போட வேண்டும். குப்பை பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில், 198
வார்டுகளில் அறிவியல் ரீதியான திடக்கழிவு மேலாண்மை மையங்கள் அமைக்கப்படும்
என்றார் அவர். மேயர் சத்தியநாராயணா பேசியது:
வார்டுகளில் திடக்கழிவு மேலாண்மை மையங்கள் அமைக்க மாமன்ற
உறுப்பினர்களுக்கு சிறப்பு நிதி வழங்கப்படும். 198 வார்டுகளிலும்
திடக்கழிவு மேலாண்மை மையங்கள் அமைக்க மாநகராட்சி ஆணையர் லட்சுமிநாராயணா
விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் அவர்.
நிகழ்ச்சியில் பாஜக எம்.பி. அனந்த்குமார், எம்.எல்.ஏ. விஜயகுமார், மாமன்ற உறுப்பினர் நாகராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.