தினத்தந்தி 02.08.2013
ஆலந்தூர் மண்டலத்தில் ரூ.1½ கோடியில் 546 தெரு விளக்குகள் மேயர் சைதை துரைசாமி தொடங்கி வைத்தார்
சென்னை மாநகராட்சி ஆலந்தூர் மண்டலத்துக்கு உட்பட்ட 156, 157, 158, 160,
161, 163, 164, 166 ஆகிய வார்டு பகுதிகளில் ரூ.1 கோடியே 50 லட்சம் செலவில்
546 தெருவிளக்குகள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த தெரு விளக்குகளை இயக்கி
வைக்கும் நிகழ்ச்சி ஆலந்தூர் பொன்னியம்மன் கோவில் தெருவில் நடந்தது.
நிகழ்ச்சிக்கு மண்டலக்குழு தலைவர் வி.என்.பி.வெங்கட்ராமன் தலைமை
தாங்கினார்.

மண்டல உதவி கமிஷனர் சிவஞானம், செயற்பொறியாளர்கள் அன்பழகன், மகேசன்,
சென்னை மாநகராட்சி மின்சார துறை உதவி செயற்பொறியாளர் பிரேம்குமார் ஆகியோர்
முன்னிலை வகித்தனர். 161–வது வட்ட மாநகராட்சி கவுன்சிலர் ஆலந்தூர்
வேம்பரசன் வரவேற்றார்.
நிகழ்ச்சியில் சென்னை மாநகர மேயர் சைதை துரைசாமி கலந்து கொண்டு 546 தெரு
விளக்குகளையும் இயக்கி வைத்தார். இதில் கவுன்சிலர்கள் வி.கோபாலகிருஷ்ணன்,
ஹேமாபரணிபிரசாத், கூட்டுறவு சங்க தலைவர்கள் கே.புருஷோத்தமன், என்.தனசேகரன்,
வாணுவம்வரதன், எம்.பி.எஸ்.மணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.