தினத்தந்தி 29.10.2013
கோவில்பட்டியில் 2–வது பைப் லைன் குடிநீர் திட்டத்துக்கு ரூ.1 கோடி நிதி வழங்கல்

கோவில்பட்டியில் 2–வது பைப் லைன் குடிநீர் திட்டத்துக்கு ரூ.1 கோடியே 10 லட்சம் நிதி வழங்கப்பட்டது.
குடிநீர் திட்டம்
கோவில்பட்டியில் ரூ.81 கோடியே 82
லட்சத்தில் சீவலப்பேரி 2–வது பைப் லைன் குடிநீர் திட்டப் பணிகள் நடைபெற்று
வருகிறது. இந்த பணிகளுக்காக கோவில்பட்டி நகரசபை சார்பில் ரூ.12 கோடியே 28
லட்சம் நிதி வழங்கப்படுகிறது. இதுவரை 2 தவணைகளாக ரூ.1 கோடியே 90 லட்சம்
நிதி வழங்கப்பட்டு உள்ளது.
தற்போது 3–வது தவணையாக நகரசபை தலைவி
ஜான்சிராணி சங்கர பாண்டியன் ரூ.1 கோடியே 10 லட்சம் நிதியினை குடிநீர்
வடிகால் வாரிய பொறியாளர் சேகரிடம் வழங்கினார்.
கலந்து கொண்டவர்கள்
நகரசபை ஆணையாளர் சுல்தானா, குடிநீர்
வடிகால் வாரிய உதவி செயற் பொறியாளர் லட்சுமணன், நகரசபை துணைத் தலைவர்
ராமர், நகர செயலாளர் சங்கர பாண்டியன், கவுன்சிலர்கள் தெய்வேந்திரன்,
பத்மாவதி, முத்துராஜ், இருளப்பசாமி, ராஜலட்சுமி உள்பட பலர் கலந்து
கொண்டனர்.
கோவில்பட்டியில் சீவலப்பேரி 2–வது பைப்
லைன் குடிநீர் திட்ட பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. எனவே வருகிற
ஜூலை மாதத்துக்குள் அனைத்து பணிகளும் நிறைவு பெற்று, பொதுமக்களுக்கு சீராக
குடிநீர் வழங்கப்படும் என்று நகரசபை தலைவி ஜான்சிராணி சங்கர பாண்டியன்
தெரிவித்தார்.