தினகரன் 19.01.2011
2 நகராட்சிகளை கொண்ட காரைக்குடி
சிவகங்கை, ஜன. 19:
சிவகங்கை மாவட்டத்தில் இரண்டு நகராட்சிகளை கொண்ட பெரிய தொகுதியாக காரைக்குடி சட்டமன்ற தொகுதி உள்ளது.
சிவகங்கை மாவட்டத்தில் 1957ல் உருவாக்கப்பட்ட காரைக்குடி தொகுதி தொழில் வளம் நிறைந்த பகுதியாக உள்ளது. தொகுதி மறுசீரமைப்பிற்கு பின் காரைக்குடி தொகுதியுடன், திருவாடானை தொகுதியில் இருந்த தேவகோட்டை தாலுகா பகுதிகள் இணைக்கப்பட்டுள்ளன. மாவட்டத்தில் உள்ள 3 நகராட்சிகளில் காரைக்குடி, தேவகோட்டை ஆகிய 2 நகராட்சிகள் காரைக்குடி தொகுதியில் இடம் பெற்றுள்ளன.
மறுசீரமைப்புக்கு பிறகு, காரைக்குடி தொகுதியில் தேவகோட்டை தாலுகா பகுதிகள், காரைக்குடி தாலுகா பகுதிகளில் பாலையூர், சாக்கோட்டை, பாணான்வயல் என்கிற பன்னாம்பட்டி, வெள்ளிப்பட்டி, பெரியகோட்டை, களத்தூர், நட்டுச்சேரி, ஜெயம்கொண்டன், புக்குடி, ஆம்பக்குடி, குளப்படி, மேலமணக்குடி, கண்டனூர், செக்கலைக்கோட்டை, காரைக்குடி, செஞ்சை, கழனிவாசல், கோவிலூர், காரைக்குடி (ஆர்.எப்.) அரியக்குடி, இலுப்பைக்குடி, மாத்தூர், சிறுகவயல், பிரம்புவயல், மித்ரவயல், செங்காத்தான்குடி, பெரியகோட்டகுடி, புதூர், அமராவதி, கல்லுப்பட்டி கிராமங்கள், கண்டனூர் (பேரூராட்சி), புதுவயல் (பேரூராட்சி), காரைக்குடி நகராட்சி ஆகிய பகுதிகள் இடம் பெற்றுள்ளன.
1957ல் எம்.ஏ.முத்தையா செட்டியார் (காங்.), 1962ல் சா.கணேசன் (சுதந்திரா), 1967ல் எஸ்.மெய்யப்பன் (சுதந்திரா), 1971ல் சி.டி.சிதம்பரம் (திமுக), 1977ல் பி.காளியப்பன் (அதிமுக), 1980ல் சி.டி.சிதம்பரம் (திமுக), 1984ல் எஸ்.பி.துரைராஜூ (அதிமுக), 1989ல் ஆர்.எம்.நாராயணன்(திமுக), 1991ல் எம்.கற்பகம் (அதிமுக), 1996ல் என்.சுந்தரம் (காங்.), 2001ல் ஹெச்.ராஜா (பி.ஜே.பி), 2006ல் என்.சுந்தரம் (காங்.) ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர். வாக்காளர்கள் விவரம்:ஆண்கள்&1,08,212, பெண்கள்&1,10,730, மொத்தம் 2,18,942.
காரைக்குடி சட்டமன்ற தொகுதி வரைபடம்.
