ராயபுரம், தண்டையார்பேட்டையில் 2 நாள்களுக்கு குடிநீர் விநியோகம் ரத்து
குடிநீர் குழாய் இணைக்கும் பணிகள் காரணமாக ராயபுரம், வண்ணாரப்பேட்டை, தண்டையார்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் வியாழன் (ஏப்.4) மற்றும் வெள்ளிக்கிழமைகளில் (ஏப்.5) குடிநீர் விநியோகம் தடைபடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து குடிநீர் வாரிய மேலாண் இயக்குநர் பி.சந்திரமோகன் வெளியிட்ட அறிவிப்பு: குடிநீர் குழாய்களை இணைக்கும் பணிகள் சென்னை தங்கசாலை சந்திப்பில் வியாழக்கிழமை காலை 10 மணி முதல் வெள்ளிக்கிழமை பிற்பகல் 3 மணி வரை மேற்கொள்ளப்பட உள்ளன.
இதன் காரணமாக ராயபுரம், பழைய வண்ணாரப்பேட்டை, புது வண்ணாரப்பேட்டை, தண்டையார்பேட்டை, தங்கசாலை உள்ளிட்ட பகுதிகளில் அன்றைய தினங்களில் குடிநீர் விநியோகம் தடைபடலாம். குடிநீர் விநியோகம் குறித்த விவரங்களுக்கு 8144930904,8144930905, 8144930906,8144930211, 8144930213 ஆகிய எண்களில், பகுதிப் பொறியாளர்களை தொடர்பு கொள்ளலாம்.