தினமணி 18.06.2013
தினமணி 18.06.2013
சூரியசக்தி விளக்கு அமைக்க ரூ.2 லட்சம் நிதி
பள்ளிகொண்டா பேரூராட்சியில் தன்னிறைவுத்
திட்டத்தின் கீழ் ரூ.6 லட்சத்தில் சூரிய சக்தி தெருமின்விளக்குகள் அமைக்க
பொதுமக்கள் பங்களிப்பாக ரூ.2 லட்சத்துக்கான வங்கி வரைவோலை ஆட்சியர்
பொ.சங்கரிடம் திங்கள்கிழமை அளிக்கப்பட்டது.
வரைவோலையை பள்ளிகொண்டா பேரூராட்சி செயல் அலுவலர் பா.பாஸ்கரன்
வழங்கினார். இத்திட்டத்தில் 20 தெருவிளக்குகள் பள்ளிகொண்டா பேரூராட்சியில்
அமைக்கப்படவுள்ளன.
பேரூராட்சிகளில் மின்கட்டணச் சுமையைக் குறைக்க அலுவலகக் கட்டடங்களிலும்,
தெருக்களிலும் சூரிய சக்தியில் எரியும் மின்விளக்குகளை அமைத்திட ஏற்கெனவே
பேரூராட்சி இயக்குநர் அறிவுறுத்தியுள்ளார்.
இதையடுத்து, இத்திட்டத்தின் கீழ் பொதுமக்கள் பங்களிப்பு நிதி
வழங்கப்பட்டதாக பேரூராட்சிகள் உதவி இயக்குநர் எஸ்.எம்.மலையமான்
திருமுடிக்காரி தெரிவித்தார்.